Latest News :

ஜெய் அப்படிப்பட்டவர் அல்ல - இயக்குநர் சுந்தர்.சி!
Friday January-12 2018

’சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்ட படத்தை தொடங்கிய சுந்தர்.சி, படப்பிடிப்பு தள்ளிப்போவதால், அந்த இடைவெளியில் ‘கலகலப்பு 2’ படத்தை இயக்கிய முடிவு செய்தவர், தற்போது முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.

 

ஜீவா, ஜெய், கேத்ரின் த்ரேஷா, நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கலகலப்பு முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்து மிர்ச்சி சிவா ஆண்டி ஹீரோவாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், மனோ பாலா உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

 

ஹிப் ஹாப்  தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் அதிவேகமாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

படம் குறித்து பேசிய சுந்தர்.சி, “கலகலப்பு இரண்டாம் பாகம் எப்போது எடுப்பீங்க? என்று பல என்னிடம் கேட்டு வந்தார்கள். ஆனால், பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது ரொம்பவே க்‌ஷ்ட்டம். காரணம், முதல் பாகத்தோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். அதனால் சரியான கதை கிடைத்தால் கலகலப்பு இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று இருந்தேன். அப்போது தான் ரொம்ப நல்ல நாட் ஒன்று கிடைத்தது. மூன்று ஹீரோக்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பின் புலம், இரண்டு ஹீரோயின்கள் அவர்களது பின்புல கதை என்று மொத்த திரைக்கதையும், நடிகர் நடிகைகள் என படம் பர்பெக்ட்டாக வந்திருக்கிறது.

 

நான் ஹீரோவாக நடித்துவிட்டு சிறு இடைவெளிக்கு பிறகு கலகலப்பு இயக்கியதால், ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் கலகலப்பு படத்தை இயக்கினேன். ஆனால், ‘கலகலப்பு 2’ படத்தை பெரிய அளவில் பிரம்மாண்டமாக இயக்கியிருக்கிறேன். காசி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை எடுத்துள்ளோம். ஒவ்வொரு பாடல்களாக வெளியிட்டு வருகிறோம். இதுவரை வெளியான பாடல்கள் அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

 

நடிகர் ஜெய்யால் பாதிக்கப்பட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறாரே, உங்களுக்கு அவரால் எதாவது பாதிப்பு ஏற்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சுந்தர்.சி, “அதுபோல எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த படம் இவ்வளவு குறுகிய காலத்தில் முடிந்ததற்கு காரணம் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தான். அவர்கள் எனக்கு கொடுத்த ஒத்துழைப்பால் தான் என்னால் படத்தை வேகமாக எடுக்க முடிந்தது. இதில் அனைத்து நடிகர்களும் இருப்பது போன்ற காட்சிகள் அதிகமாக உள்ளது. இதனால் ஒரு நடிகரை வைத்து ஷான் எடுக்கும் போது, மற்றொரு நடிகர் காத்திருக்க வேண்டியது இருக்கும். அதுபோல சமயத்தில் எனக்கு கொஞ்சம் கஷ்ட்டமாக இருக்கும், ஆனால், ஜெய், ஜீவா ஆகியோர் எதையும் பார்க்காமல் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். 7 மணிக்கு முதல் ஷாட் என்றால் ஜெய் மற்றும் ஜீவா ஆறே முக்காள் மணிக்கே மேக்கப்போடு செட்டில் இருப்பார்கள்.” என்றார்.

 

இயக்குநர் சுந்தர்.சி நடிகர் ஜெய்க்கு பாராட்டு பத்திரம் கொடுத்தாலும், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எப்போதும் போல ஜெய் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

1765

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்!
Monday April-23 2018

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவர் இன்று அமெரிக்கா புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...

தங்கமகனுக்கு பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்!
Monday April-23 2018

கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த 21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3 ஆம் இடத்தை பிடித்தது...

வைரமுத்துவின் எழுதிய ஜி.எஸ்.டி பாடல்! - குத்தாட்டம் போட்ட மும்பை அழகி
Monday April-23 2018

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன் சார்பாக வி...

Recent Gallery