‘மெர்சல்’ பட வசனம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த விஜய்!
Sunday January-14 2018

கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினாலும், அதே சர்ச்சையின் மூலம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க தலைவர்களுக்கு, பலர் பதிலடி கொடுத்தாலும், சம்மந்தப்பட்ட நடிகர் விஜய் மட்டும் படத்தில் பேசியதோடு சரி, நிஜத்தில் அக்கட்சிக்கு எந்தவித பதிலடியோ, கருத்தோ தெரிவிக்கவில்லை.

 

இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜய், ‘மெர்சல்’ படத்தில் சர்ச்சையான வசனங்கள் பேசியது ஏன்? என்பதற்கான காரணத்தை மனம் திறந்து கூறினார்.

 

கமல் கையால் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை பெற்ற விஜய், “தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த  படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு தமிழனா எனக்கு பெருமை.

 

சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால் பிரச்னைகளை சந்தித்த மெர்சல் படம் வெளியீட்டின் போது ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

 

சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்.

 

மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Related News

1770

ஆளே மாறிப்போன அஜித் நாயகி! - புகைப்படம் உள்ளே
Monday January-22 2018

‘இதயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகானவர் ஹீரா...

விஜய் படத்திற்கு நிகரான படமாக ‘மோகினி’ இருக்கும்! - இயக்குநர் ஆர்.மாதேஷ்
Monday January-22 2018

தமிழ் சினிமாவின் டிரெண்டுக்கு ஏற்றவாறு படம் எடுப்பதோடு, இளசுகளின் மனசை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு படம் எடுத்து ஜெயிக்கும் இயக்குநர்களில் ஆர்...

‘முந்திரிக்காடு’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்!
Monday January-22 2018

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’...

Recent Gallery