பார்த்திபனுடன் இணைந்த சீதா! - நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பு!
Monday February-12 2018

நடிகர் பார்த்திபன் - நடிகை சீதா தம்பதியின் இளைய மகளான கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷயை கீர்த்தனா மனக்க உள்ளார். 

 

மகளின் திருமணத்திற்காக திரையுலக பிரமுகர்களை நேரில் சந்தித்து பார்த்திபன் அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இதற்கிடையே, பிரிந்து வாழும் சீதாவும், பார்த்திபனும் மகளின் திருமணத்திற்காக மீண்டும் சேரப் போவதாக கூறப்பட்டது. மேலும், பார்த்திபன் சீதாவை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.

 

இந்த நிலையில், கீர்த்தனா - அக்‌ஷய் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் நடிகை சீதா கலந்துக்கொண்டது, பார்த்திபனின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததோடு, இந்த தம்பதி மீண்டும் சேர மாட்டார்களா, என்று எதிர்ப்பார்த்தவர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related News

1980

விஜய் படத்தால் அட்லீக்கு வந்த புது பயம்!
Friday August-17 2018

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25, மாரி தனுஷ் 15!
Friday August-17 2018

தொடர் கன மழையின் காரணமாக கேரளா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது...

சென்னையை அதிர வைத்த நயந்தாரா! - அதிர்ச்சியில் கோலிவுட்
Friday August-17 2018

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயந்தாரா, தற்போது நடிகைகளுக்குடன் போட்டி போடாமல் நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்...

Recent Gallery