பாலசந்தரின் நிறுவனம் ஏலத்திற்கு வருகிறதா? - விளக்கம் அளித்த கவிதாலயா
Tuesday February-13 2018

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், பல வெற்றிப் படங்களை இயக்கியது போல தனது கவிதாலயா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்திருக்கும் இந்நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால், ஏலத்திற்கு வந்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது.

 

இதையடுத்து பல ஊடகங்களில் இந்த செய்தி வேகமாக பரவி வந்த நிலையில், கவிதாலயா நிறுவனம் சார்பில், ஏலம் குறித்து இன்று விளக்கம் அளிக்கப்பட்டது.

 

அதில், கவிதாலயா நிறுவனம் வங்கியில் கடன் வாங்கியிருப்பது உண்மை தான், என்றாலும் நிறுவனம் ஏலத்திற்கு வரவில்லை, அது தவறான செய்தி.

 

நிறுவனத்தின் மீது வங்கியில் உள்ள கடன் தொகையை ஒரே செட்டிமெண்டில் கொடுப்பதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கடன் அடைக்கப்பட்டுவிடும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

1988

சினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு!
Tuesday May-22 2018

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை  சினி மியூசிசியன்ஸ் தேர்தல் நடை பெறுவது வழக்கம், அதன்படி சென்னை வடபழனியில் அவர்களது யூனியனில் தேர்தல் நடை பெற்றது...

நாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி!
Tuesday May-22 2018

காமெடி வேடங்களில் நடித்து வரும் ஆர்...

ஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’!
Tuesday May-22 2018

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்...

Recent Gallery