‘கலகலப்பு’ மூன்றாம் பாகத்திற்கு ரெடியாகும் சுந்தர்.சி!
Wednesday February-14 2018

சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘கலகலப்பு’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, ‘கலகலப்பு-2’ வை சுந்தர்.சி இயக்கினார். ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

 

தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிளும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக இப்படம் ஓடிக்கொண்டிருப்பது, சுந்தர்.சி உள்ளிட்ட ‘கலகலப்பு-2’ படக்குழுவினரை பெரும் சந்தோஷமடைய செய்துள்ளது.

 

இந்த நிலையில், கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முனையிப்பில் சுந்தர்.சி ஈடுபட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் ‘கலகலப்பு-2’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சுந்தர்.சி, கலகலப்பு மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்று தொடர்ந்து எடுப்பேன், என்று கூறினார். மேலும், ‘கலகலப்பு-3’ யில் ஜீவா, ஜெய் கூட்டணியோடு மிர்ச்சி சிவாவும் இணைந்து நடிப்பார் என்றும் அவர் கூறினார்.

Related News

1990

‘கரு’ வின் பலமே சாய் பல்லவி தான் - இயக்குநர் விஜய்
Saturday February-24 2018

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கரு’...

ரஜினியின் புதிய படத்தில் திடீர் குழப்பம்!
Saturday February-24 2018

ரஜினிகாந்தின் ’காலா’, ‘2...

தியேட்டரில் தயாரிக்கப்படும் திருட்டு விசிடி! - வருத்தத்தில் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்
Saturday February-24 2018

தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய எதிரியாக திருட்டு விசிடி விளங்குகிறது...

Recent Gallery