Latest News :

சுசீலாவின் ஆசையை நிவர்த்தி செய்த வைரமுத்து
Friday April-01 2016

அதிக பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ள பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து சுசீலாவுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், புத்தர் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

 

இந்த புத்தர் சிலை பரிசு சுசிலாவை ரொம்பவே கவர்ந்துள்ளது. காரணம், அவர் சமீபத்தில் இலங்கைக்கு சென்ற போது, அங்கே ஒரு புத்தர் சிலையை பார்த்து, ”இதை வீட்டில் வைத்தால் நன்றாக இருக்குமே” என்று நினைத்தாராம். ஆனால் அதை அவரால் வாங்க முடியவில்லையாம்.

 

இந்த நிலையில், வைரமுத்து புத்தர் சிலையை பரிசாக வழங்கியதால், அவர் ரொம்பவே பரசவமடைந்துள்ளாராம்.

 

சுசீலாவை வாழ்த்தி வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “17595 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்க்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசிலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

 

எத்தனை மொழிகளில் பாடினாலும், அத்தனை மொழிகளிலும் துல்லியம், அழகு, மேன்னை முன்றையும் கொண்டு வரும் ஆற்றல் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு உண்டு. நம் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தாய்மொழிதான் உண்டு, ஆனால் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு 7 தாய்மொழிகள். அவை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரியா. 7 மொழிகளை தாய் மொழிகளாக கொண்டதை போல் பாடுபவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள். 1953ல் தனது முதல் பாடலை பாடினார், அந்த ஆண்டு தான் நான் பிறந்தேன். இதற்கு என்ன காரணம் என்றால், என்னை போன்றவர்களுக்கு அவர் பாடிய பாட்டுதான் தாலாட்டாக இருக்கவேண்டும் என்று காலம் விதித்திருக்கிறது. அவரது தமிழ் பாடல்களில் உள்ள உச்சரிப்பின் துல்லியம், தமிழின் மேன்மை, சொற்களின் சுத்தம் ஆகியவை அவருக்கு மட்டுமே உரியது. உதாரணத்திற்கு, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாட்டில் சொற்களை மட்டும் அல்ல, ஒலிக்குறிப்பை கூட பாடியிருக்கிறார், விசும்பலை பாடியிருக்கிறார்.

 

எனக்கும் மிகவும் பிடித்த "என்னை நினைத்து என்னை அழைத்தாயோ" என்ற பாடல், படத்தோடு பார்க்கையில் கண்ணீர் வரும், அப்படியென்றால நடித்தவர்கள் அழ வைக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த பாட்டை செவியில் கேட்டாலும் அழுகை  வரும், அப்படியென்றால் சுசிலா நம்மை அழ வைக்கிறார் என்று அர்த்தம். அப்படியெல்லாம் இந்த மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள்.

 

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் மற்றொன்று "கண்ணுக்கு மை அழகு" பாடல். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த பாடலை யார் வைத்து பாட வைக்கலாம் என்று கேட்டார். அதற்கு நான், உங்களது இசையில் பாடகி சுசிலா அம்மையார் பாடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதற்கு பொருத்தமான பாட்டு இதுதான் என்றேன். ஏன் இந்த பாட்டு பொருத்தம் என்று அவர் கேட்டார். தமிழுக்கு சிறப்பான "ழ" எழுத்து இப்பாட்டில் அதிகம் வருகிறது, அந்த "ழ" எழுத்தை உச்சரிப்பதில் பாடகி சுசிலா அம்மையார் அவர்களுக்கு இணை அவர் மட்டுமே என்றேன். தமிழுக்கு சிறப்பு "ழ"கரம், இசைக்கு சிறப்பு பாடகி சுசிலா அம்மையார்.

 

பாடகி சுசிலா அம்மையாரின் வரலாறு மிகப் பெரிது, 1950களில் பாட வந்தவர் சுசிலா. பல இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், ரசிகர்கள், தலைமுறைகள் என அனைத்து மாறி இருக்கிறது. இத்தனையும் தாண்டி முன்று தலைமுறைக்கு தனது இசை பங்களிப்பை செய்தவர் சுசிலா அம்மையார்.

 

இசை என்பது பயிற்சியால் வந்துவிடும், குரல் என்பது இயற்கையின் கொடை. அந்த இயற்க்கையின் கொடையாக தனக்கு வழங்கப்பட்ட குரலை இந்திய மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுவதற்கும், அமைதிபடுவத்ற்க்கும், அன்பு செலுத்துவதற்க்கும் பயன்படுத்தி இருக்கிறார்.

 

இவரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. பலரது கண்ணீரை துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரை காதலிக்க வைத்த குரல், பலரது சண்டைகளை தீர்த்து வைத்த குரல், பல மேடைகளில் தாலாட்டிய குரல், சுசிலா அம்மையாரின் குரல். இவரது குரல் இந்த சமுகத்திற்கு செய்த பணி மிகப்பெரியது. இவரின் குரலால் காற்று தன்னைத்தானே தாலாட்டிக்கொண்டு தூங்கவைத்துக் கொள்கிறது என்று சொல்லவேண்டும்.  சுசிலா அம்மையாரின் தலைமுறை தாண்டிய குரலுக்கு எனது தலைவணக்கத்தை நான் தெரிவித்து கொள்கிறேன்.

 

பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும், உயர்ந்த புகழை பெற வேண்டும், இவர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெரிய பெருமை.  வாழும் காலத்திலேயே பெருமை எல்லோரையும் தேடி வாராது, அந்த பெருமை பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவரால் இந்தியா பெருமை பெருகிறது. தமிழ் கலை பெருமை பெருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரசிக பெருமக்கள் என் மூலமாக அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related News

36

’ஹனுமன்’ நாயகன் தேஜா சஜ்ஜாவின் புதிய படம் அறிவிப்பு வெளியானது!
Tuesday April-16 2024

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியான பான் இந்தியா திரைப்படமான ‘ஹனுமன்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜாவை சூப்பர் ஹீரோவாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்...

”நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்” - நடிகர் மோகன்
Tuesday April-16 2024

வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் மோகன், தமிழ் சினிமாவில் அதிமான வெள்ளிவிழா திரைப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை பெற்றவர்...

சென்னையில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றது பெருமையாக இருக்கிறது - நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சி
Tuesday April-16 2024

சென்னை, பல்லாவரத்தில் உள்ள விஸ்டாஸின் 14 வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது...