Latest News :

சென்னையில் நடைபெறும் ‘ஒயிலாட்டம் கின்னஸ் உலக சாதனை’! - பங்கேற்க விருப்பமா?
Thursday November-15 2018

பல்வேறு துறைகளில் கின்னஸ் உலக சாதனைகளை பலர் நிகழ்த்தி வரும் நிலையில், முதல் முறையாக கிராமத்து கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் மூலம் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த இருக்கிறார்கள். சென்னையில் நடைபெறும் இந்த மாபெரும் ஒயிலாட்டம் கின்னஸ் உலக சாதனையில் கலந்துக் கொண்டு நடனம் ஆட விரும்புகிறவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாய்ப்பும் வழங்கியுள்ளார்கள்.

 

ஸ்வரங்களின் சங்கமம் இசைக்குழு மற்றும் பிரபல திரைப்பட பின்னணி பாடகரும், நாட்டுப்புற பாடகருமான வேல்முருகன் ஆகியோருடன் நிருத்திய நிருத்யாலயா இணைந்து இந்த ஒயிலாட்டம் கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்த இருக்கிறார்கள்.

 

வரும் நவம்பர் 25 ஆம் தேதி, மாலை 3 மணியளவில் சென்னையை அடுத்துள்ள திருநின்றவூரில் உள்ள ஜெயா கல்லூரியில் இந்த பிரம்மாண்ட ஒயிலாட்டம் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 

தமிழின் பெருமையையும், தமிழர்களின் உணர்வுகளையும், கிராமக் கலைகளின் வலிமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் நோக்கில் நடத்தப்படும் இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வில், கலந்துக் கொண்டு நடனம் ஆட விருப்பமுள்ள கலைஞர்கள் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். 5 வயது முதல் 60 வரை என வயது வித்தியாசமின்றி இந்த சாதனையில் யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம்.

 

அப்படி பங்குபெற விரும்புகிறவர்கள் தங்களது பெயரை பதிவு செய்தவுடன், 25 ஆம் தேதி நடைபெற உள்ள கின்னஸ் சாதனை ஒயிலாட்டத்தில் எப்படி நடனம் ஆடுவது என்பது குறித்த வீடியோ பதிவு அனுப்பப்படும் அதைப் பார்த்து நடன் பயிற்சி மேற்கொண்டு, நிகழ்ச்சியில் நடனம் ஆடி நீங்களும் கின்னஸ் உலக சாதனையாளராகலாம்.

 

இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள், 9283 102030 / 98844 00790 / 98412 77846 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். 

 

மேலும், இந்த நிகழ்வில் நடனம் ஆடவில்லை என்றாலும், வேறு எந்தவிதத்தாலவது தங்களை ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பவர்களும், ஸ்பான்சர் வழங்க விரும்புகிறவர்களும் மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், நடன இயக்குநர்கள் என்று ஏராளமான சினிமா பிரபலங்கள், நாட்டுப்புற கலைஞர்கள், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் மாபா.பாண்டியராஜன் என ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொள்ளும் இந்த நிகழ்வு குறித்த அறிவிப்பை பாடகர் வேல்முருகன் மற்றும் ஸ்வரங்களின் சங்கமம் இசைக்குழு, நிருத்திய நித்யாலயாவின் செளமியா ராஜேஷ் ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களின் முன்னிலையில் வெளியிட்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய பாடகர் வேல்முருகன், “தமிழின் பெருமையும் தமிழர்களின் உணர்வுகளையும் பறைசாற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25.11.18 ஞாயிறு அன்று சென்னை திருநின்றவூர் அருகே உள்ள ஜெயா கால்லூரியில் மதியம் 3.00 மணியளவில் நடைபெற உள்ளது.

 

தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நடனத்தை 5000 பேருக்கும் மேல் நடனமாடி கின்னஸ் உலாக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளனர். இந்த சாதனை நிகழ்வில் பங்கு பெற அதிகமானபேர் பெயர் கொடுத்து வருகின்றனர்.

 

இந்த முயற்சிக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், இசைமைப்பாளர்கள் தேவா, ஜி.வி.பிரகாஷ்,கவிஞர் பிறைசூடன், முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம், நடிகர்கள் தம்பிராமையா, சூரி, ரோபோசங்கர், போஸ்வெங்கட், வையாபுரி, நடிகை ஆர்த்தி, திண்டுக்கல் லியோனி, சுப.வீரபாண்டியன், ஈரோடுமகேஷ், நடன இயக்குநர் தினேஷ், தீபக், மைம் கோபி, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.” என்றார்.

 

Singer Velmurugan

 

பத்திரிகையாளர் சந்திப்பில் கின்னஸ் மற்றும் ஆசிய புக் ஆப்ரெக்கார்ட் மேனேஜ்மெண்ட் குழுவை சார்ந்த விவேக், சுரங்களின் சங்கமம் இசைகுழுவை சேர்ந்த ராஜேஷ், பரதத்தில் கின்னஸ் சாதனை புரிந்த சௌமியா, ரெயின் டிராப்ஸ் அரவிந்த், பி.ஆர்.யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோரும் பேசினார்கள்.

Related News

3754

உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
Wednesday April-24 2024

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Wednesday April-24 2024

யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ’ஜெய் ஹனுமான்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
Wednesday April-24 2024

கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...