Latest News :

‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ விமர்சனம்

d4ee5acb300ad6ae9450ec61c5df1e89.jpg

Casting : Vimal, Ashna Saveri, Singam Puli, Poorna, Anandaraj, Mansoor Alikhan

Directed By : AR Mukesh

Music By : Natarajan Sankaran

Produced By : Sharmila Mandrey, R.Sarvan

 

’ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்டு காமெடி படங்கள் வரிசையில் வெளியாகியிருக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

அழகான ஆஷ்னா சாவேரியாகட்டும், அவரது அக்காவான அம்சமான ஆண்டியாகட்டும், யார் கிடைத்தாலும் காம விளையாட்டு விளையாடும் மச்சக்கார விமலும், சிங்கம்புலியும் மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை செய்கிறார்கள். அந்த சம்பளம் பத்தாததால், பார்ட் டைமாக இரவு நேரங்களில் யாரும் இல்லாத வீடுகளில் சோப்பு டப்பா, சீப்பு, பொம்மைகள் போன்ற பொருட்களை திருடி வருகிறார்கள். அப்படி ஒரு வீட்டில் திருடும் போது பத்து லட்சம் ரூபாயை திருடி விடுகிறார்கள். அந்த பணத்திற்காக இவர்களை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணா துரத்த, மறுபுறம் பொம்மை டப்பா ஒன்றுக்காக, தாதா ஆனந்தராஜும் அவரது ஆட்களும் துரத்துகிறார்கள். இதற்கிடையே, விமல் லண்டனில் இருந்த போது, அவரை வச்சு...வச்சு...செய்த சன்னி லியோனி வகையறாவை சேர்ந்த பெண்ணும், விமலை தேடி வர, இந்த மூன்று கோஷ்ட்டியிடமும் இருந்து விமலும், சிங்கம்புலியும் தப்பித்தார்களா, இல்லையா என்பதை தான் கிளுகிளுப்பாகவும், கலகலப்பாகவும் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

 

படத்தின் ஆரம்பத்திலேயே விமல் மீது பொறமை ஏற்படும்படியான காட்சியை வைத்து சூடேற்றும் இயக்குநர், ஆஷ்னா சாவேரியை காட்டி, ஏற்றும் சூட்டில் மார்கழி மாத குளிர் ஒன்னுமில்லாமல் போய்விடுகிறது.

 

எதார்த்தமாக நடிக்க கூடிய விமல், இதிலும் ரொம்ப எதார்த்தமாகவே நடித்திருந்தாலும், அவரது நடிப்பை காட்டிலும் அவர் செய்யும் சில்மிஷங்களை மொத்த திரையரங்கமே எச்சில் ஒழுக ரசிக்கிறது.

 

விமலுக்கு இணையான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வரும் சிங்கம்புலி, நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். மனைவியை பிரிந்து வாழும் அவர், விமலின் ரொமான்ஸை பார்த்துவிட்டு, ஏக்கத்தில் அழுதுக்கொண்டே வீடு திரும்புவதும், வீட்டுக்கு போனதும் பாத்ரூமில் உட்கார்ந்து புத்தகம் படிக்கும் போது, ஏற்படும் இடைஞ்சலால் எரிஞ்சலடையும் காட்சியில் அசத்தலாக நடித்திருக்கிறார்.

 

தாவணியை பாதியாக கிழித்து உடையாக அணிந்துக்கொண்டு வரும் ஆஷ்னா சாவேரி, மறைக்க வேண்டிய இடங்களை ரெட் மார்க் போட்டு காட்டுவது போல வந்து கிரங்கடிக்கிறார். விமல் அவரிடம் காட்டும் கைவரிசையும், அதற்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்பும் எலக்ட்ரிக் ஸ்டவ் போல டக்கென்று சூடாக்கிவிடுகிறது.

 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வரும் பூர்ணாவுக்கு அவரது கிராப் ஹேர் ஸ்டைல் கம்பீரமான தோற்றத்தை கொடுத்திருப்பது போல, நடிப்பிலும் கம்பீரத்தை காட்ட அம்மணி முயற்சித்திருந்தாலும், காமெடி படம் என்பதால் அது எடுபடாமல் போகிறது.

 

ஆனந்தராஜ் அண்ட் கோ மற்றும் மன்சூரலிகான் ஆகியோரது எப்பிசோட்டும், லண்டன் பெண்ணின் காம விளையாட்டும் சிரிக்க வைக்கிறது.

 

EEMI Review

 

படத்தின் முதல்பாதி முழுவதையும் கிளுகிளுப்பாகவே நகர்த்தியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முகேஷ், இரண்டாம் பாதியை கலகலப்பாக நகர்த்துகிறார். அடல்டு படம் தான் என்றாலும் படத்தின் வசனங்களிலும், காட்சிகளிலும் ரொம்பவே கவனம் செலுத்தியிருக்கிறார்.

 

படத்தில் மூன்று விதமான கிளை கதைகள் இருந்தாலும், திரைக்கதை அழுத்தமில்லாமல் நகர்கிறது, அது இந்த படத்திற்கு தேவையில்லை என்று விட்டுவிட்ட இயக்குநர், முழுக்க முழுக்க இளசுகளை குஷிப்படுத்துவதிலே குறியாக இருந்திருக்கிறார் என்பது படத்தின் அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.

 

மொத்தத்தில் இந்த, ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ மார்கஷி பனியையே சூடாக்கும் ஹோட் மசாலா

 

ரேட்டிங் 3.5/5