Oct 20, 2017 12:52 PM

திருமணம் குறித்து நடிகை நமீதா பரபரப்பு பேட்டி!

திருமணம் குறித்து நடிகை நமீதா பரபரப்பு பேட்டி!

நடிகை நமீதா விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும், பழைய நடிகர் சரத்பாபுவை அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கான ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கடந்த வாரம் வெளியான இந்த செய்தியை மறுத்த நடிகர் சரத்பாபு, இது வெறும் வதந்தி என்று விளக்கம் அளித்திருந்தார்.

 

ஆனால், நடிகை நமீதா தரப்பில் எந்தவித விளக்கமும் இது குறித்து அளிக்கப்படாத நிலையில், தற்போது திருமணம் செய்தி குறித்து நமீதா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

 

அதில்,  தனக்கும் நடிகர் சரத்பாபுவுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்ட தகவலைக் கேட்டதுமே ஷாக் ஆகி விட்டதாக கூறியுள்ளார். மேலும், தனக்கும் தன்னை விட மூத்த நடிகருக்கும் திருமணம் செய்து கொள்வது எப்படி சாத்தியம் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

இந்த தகவலை வெளியிட்டவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் இது மிகவும் தவறான கருத்து என்று கூறிய நடிகை நமீதா, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.