Oct 21, 2017 07:53 AM

'மெர்சல்’ படத்தில் இருந்து நீக்கப்படும் 4 காட்சிகள்!

'மெர்சல்’ படத்தில் இருந்து நீக்கப்படும் 4 காட்சிகள்!

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகி பெரும் வரவேற்போடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி தொடர்பான வசனங்களுக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கவில்லை என்றால் படத்தை ஓடவிடமாட்டோம், என்று மிரட்டலும் விடுத்துள்ளது.

 

இதையடுத்து, கமல்ஹாசன், இயக்குநர் ரஞ்சித், நடிகை காயத்ரி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதோடு, காட்சிகளை நீக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். அதே சமயம் சென்சார் குழுவும், படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் எதுவும் இல்லை, அதனால் காட்சிகளை நீக்க வேண்டிய அவசியமும் இல்லை, என்று கூறியுள்ளனர்.

 

இந்த நிலையில், பா.ஜ.க-வின் மிரட்டலுக்கு அடிபணிந்துள்ள மெர்சல் படக்குழுவினர் படத்தில் இருந்து 4 காட்சிகளை நீக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளான மருத்துவம், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வரும் 23 அல்லது 24-ஆம் தேதியில் தணிக்கை குழுவிடம் கடிதம் கொடுத்து பின்னர் நீக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பும் படக்குழுவினரும் இடையே நடைபெற்ற ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.