Oct 23, 2017 10:28 AM

தொடரும் மெர்சல் சர்ச்சை - விஜய் மீது போலீசில் புகார்!

தொடரும் மெர்சல் சர்ச்சை - விஜய் மீது போலீசில் புகார்!

மெர்சல் படம் குறித்து உருவான சர்ச்சை தொடர்ந்துக்கொண்டே இருந்தாலும், அப்படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி குறித்த வசனங்கள் நீக்கப்படவில்லை. அதே சமயம், தேவைப்பட்டால் காட்சிகளை நீக்க தயார், என்று தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இருப்பினும், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கல் சங்கம் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் என்று ஏராளமானோர் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும், தமிழக பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் பற்றியும், விஜய் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மீது புகார் அளித்துள்ளார்.

 

அந்த புகாரில், ஜி.எஸ்.டி க்கு எதிராகப் ஏசிய, வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.