Oct 24, 2017 02:18 PM

பிரபல மலையாள பட இயக்குநர் ஐ.வி.சசி மரணம்

பிரபல மலையாள பட இயக்குநர் ஐ.வி.சசி மரணம்

பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சரி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.

 

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இயக்குநர் ஐ.வி.சசிக்கு இன்று காலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார்.

 

மலையாளம், தமிழ் மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் மற்றும் காளி, குரு, பகலில் ஒரு இரவு உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

 

ஐ.வி.சசி 1948-ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். 1975-ம் ஆண்டு அவர் இயக்குநராக அறிமுகம் ஆனார். ‘உற்சவம்’ என்ற மலையாளப் படமே அவர் இயக்கிய முதல் படமாகும்.

 

1979-ம் ஆண்டு முதல் தமிழ்படத்தை இயக்க செய்தார். அலாவுதீனும் அற்புத விளக்கும் அவர் இயக்கிய முதல் தமிழ் படமாகும். கடைசியாக அவர் 2009-ல் மலையாள படமான ‘வெள்ளதூவல்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

 

ஐ.வி.சசி மலையாள நடிகை சீமாவை 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மணந்தார். ‘அவளோட ராவுகள்’ என்ற மலையாள படத்தில் சீமா கதாநாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது. ஐ.வி.சசிக்கு அனு, அனி ஆகிய மகள், மகன் உள்ளனர்.