Oct 31, 2017 02:53 AM

நடிகர் வடிவேலு மீது முன்னணி இயக்குநர் பரபரப்பு புகார்!

நடிகர் வடிவேலு மீது முன்னணி இயக்குநர் பரபரப்பு புகார்!

காமெடி நடிகர்களின் முன்னணியில் இருந்த வடிவேலும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்த நிலையில், அரசியலில் ஈடுபட்டு சுமார் 3 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு மீண்டு நடிக்க வந்தவர் ஹீரோவாக ஹிட் கொடுத்துவிட்டு தான் காமெடியில் நடிகக் தொடங்குவேன், என்று அடம்பிடித்தார்.

 

அவரது பிடிவாதத்திற்காக இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து தோல்விக் கொடுத்தவர், இது வேலைக்கு ஆகாது, என்பது புரிந்துக்கொண்டு தற்போது மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இதற்கிடையே, வடிவேலு கதையின் நாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்க, சிம்புதேவன் இயக்குகிறார். இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 

படத்தின் ஆரம்ப் வேலைகளை நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளாமல் வடிவேலு இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட அரங்குகளால் தயாரிப்பு தரப்புக்கு செலவு அதிகமானதே தவிர, படப்பிடிப்பு நடந்தபாடில்லையாம்.

 

தற்போது 2.0 படத்தின் பின்னணி பணிகளில் ஈடுபட்டுள்ள ஷங்கர், வடிவேலுவின் இம்சை தாங்காமல், தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் வடிவேலுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்றுக் கொடுங்கள், வேறு ஹீரோவை வைத்து படட்தை எடுத்துக் கொள்கிறோம், என்று தெரிவித்துள்ளாராம்.