Nov 15, 2017 01:53 PM

மிஸ்டர் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் பிந்து மாதவி!

மிஸ்டர் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் பிந்து மாதவி!

பீட்டர் இங்லேண்ட் மிஸ்டர் இந்தியா 2017 என்ற புதிய பதிப்பின் துவக்க விழா இந்த ஆண்டு அதிக உற்சாகமும் ஆர்வத்துடனும் டங்கியது.இதற்கான திறன் தேர்வு நடத்தப்பட்ட இரண்டாவது நகரம் சென்னை ஆகும். இந்நகரம் முழுவதிலும் இருந்து 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இது தி கிராண்ட் பை ஜிஆர்டி ஓட்டல்ஸில் நடைபெற்றது. இந்நிறுவனம் திறன் தேர்வுக்கான விருந்தோம்பல் மற்றும் நிகழ்விடத்தின் கூட்டாளி ஆகும்.

 

பீட்டர் இங்லேண்ட் மிஸ்டர் இந்தியா வேர்ல்ட் 2016-இன் விஷ்ணுராஜ் S.மேனன், பிரபல நடிகையும் மாடலுமான பிந்து மாதவி ஆகியோர் இந்த திறன் தேர்வுகளின் நடுவர்களாக பணியாற்றினர். 

 

தேர்வு செய்யப்பட்டவர்கள் 26.11.2017 அன்று மும்பையில் நடைபெறும் இறுதிச் சுற்று திறன் தேர்வுக்கான போட்டியில் பங்கு பெறுவார்கள். இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர்கள் பேஷன் மற்றும் பொழுதுதுறையைச் சேர்ந்த பிரபல நிபுணர்களின் கீழ் கடுமையான பயிற்சியையும் உடற்பயிற்சியையும் மேற்கொள்வார்கள். 

 

பீட்டர் இங்லேண்ட் மிஸ்டர் இந்தியா வேர்ல்ட் 2017-இன் 4 வெபிசோடுகளை ஜும்ஆப்-இலும், 14.12.2017 அன்று இறுதிப் போட்டியை ஜும்டிவியில் மட்டும் ஒளிபரப்புவதைப் பாருங்கள். 

 

சமீபத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த முதல் ஆசியரான ரோஹித் கந்தெல்வால், மிஸ்டர் இந்தியா 2015-ஐ வென்றதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார். கடந்த ஆண்டு மிஸ்டர் வேர்ல்ட் 2016 அழகு வண்ண உடை அணிவகுப்பில் வெற்றிபெற்றார். மேலும், மிஸ்டர் சூப்பரா நேஷனல் 2016- இன் 2 வது ரன்னர் இடத்தைவென்ற ஜிதேஷ் தாக்கூர் முக்கிய பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து, அவை விரைவில் வெளியாக உள்ளன. அவரைப் போல இன்னும் பல வெற்றியாளர்கள் வெற்றி பெற்று நமது நாட்டிற்கு பெருமை செய்ய வேண்டும் என்பது நமது நோக்கமாகும்.