Nov 16, 2017 06:32 AM

விஜயின் 62 வது படம் குறித்து லீக்கான சஸ்பென்ஸ்!

விஜயின் 62 வது படம் குறித்து லீக்கான சஸ்பென்ஸ்!

‘துப்பாக்கி’, ‘கத்தி’ என விஜையை வைத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த முருகதாஸ் மூன்றாவது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார்.

 

விஜயின் 62 வது படமான இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில்,  விஜய்க்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் ஒன்று கசிந்துள்ளது. முக்கிய சமூக பிரச்சினை குறித்துபேசும் இப்படத்தில் விஜய், தன் வயதிலேயே நடிக்கிறாராம்.

 

அதாவது, விஜய்க்கு தற்போது 43 வயதாகிறது. இதே வயதுள்ள கதாபாத்திரத்தில் தான் விஜய் நடிக்க உள்ளாராம். இதற்காக தனக்கு எப்போதுமுள்ள சிறு நரை முடியுடனேயே தான் படம் முழுவதும் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.