Nov 21, 2017 06:33 AM

வாரிசை களம் இறக்கிய மன்சூர் அலிகான்!

வாரிசை களம் இறக்கிய மன்சூர் அலிகான்!

பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளவர், தனது மகனை களத்தில் இறக்கியுள்ளார்.

 

ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக மன்சூர் அலிகான் எழுதி இயக்கி, தயாரிக்கும் ’கடமான் பாறை’ படத்தில் இளம் ஹீரோவாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் புதியவர்கள்.

 

மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரவிவர்மா இசையமைக்கிறார். சொற்கோ, ரவிவர்மா, மன்சூர் அலிகான் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். ஜெயகுமார் கலைத்துறையை கவனிக்க, சந்துரு, சிவா, ஜெயா, சம்பத்ராஜ் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். ராக்கி ராஜேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜெ.அன்வர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

 

இப்படம் பற்றி கூறிய மன்சூர் அலிகான், “காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம் இது தான் மையக் கதை!                                                                                                                                      

காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தான் திரைக்கதை. பொண்ணுங்க கிட்ட இருக்கிற ஒண்ணு அவங்கள விட மத்தவங்களுக்குத் தான் அதிகமாகப் பயன்படும் அதுதான் கதை.

 

படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேசன்களை தேடிபிடித்து படமாக்கி உள்ளோம். பக்கா கமர்ஷியல், காமெடி படமாக ‘கடமான் பாறை’ உருவாகி உள்ளது.” என்றார்.