Dec 12, 2017 06:41 AM

சினிமா பி.ஆர்.ஓ யூனியன் நடத்தும் முப்பெரும் விழா!

சினிமா பி.ஆர்.ஓ யூனியன் நடத்தும் முப்பெரும் விழா!

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் சார்பில் முப்பெரும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியதாவது:

 

தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆா். அவா்கள், திரு. பிலிம்நியூஸ்ஆனந்தன் அவா்களை “மக்கள் தொடா்பாளராக” நியமித்து திரை உலகிற்கு அறிமுகபடுத்தினார்.

 

அதன் பின்னா் டாக்டா் கலைஞா் முதல்வரான பின் எங்கள் பிதாமகன் பிலிம்நியூஸ்ஆனந்தன் அவா்களுக்கு “கலைமாமணி” விருது வழங்கி கௌரவபடுத்தினார்.

 

அதன் பிறகு முன்னாள் முதல்வா் மாண்புமிகு ஜெயலலிதா அவா்கள் பிலிம்நியூஸ்ஆனந்தன் அவா்களின் திரையுலகின் சேகரிப்பான தகவல் மற்றும் புகைப்படங்களுக்கு நிதி கொடுத்து வாழ்த்தினார்.

 

ஆகவே எங்கள் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆா். அவா்களின் நூற்றாண்டு விழாவும், 1958ல் மக்கள் தொடா்பாளா் என்ற தொழில் துவங்கப்பட்டு 60ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் 1993ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டு வெள்ளி விழாவையும் சோ்த்து முப்பெரும் விழாவாக கொண்டாட உள்ளோம்.

 

விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களின் படங்களில் பணியாற்றிய நடிகா், நடிகையா் தொழில் நுட்ப கலைஞா்களுக்கு விருது வழங்கி கெளரவபடுத்த உள்ளோம்.

 

யூனியன் சார்பில் மலா் ஒன்றையும் வெளியிட உள்ளோம்.

 

இசையமைப்பாளா் இன்னிசை வேந்தா் டாக்டா் (சங்கா்) கணேஷின் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும், நடன இயக்குனா் கலா மாஸ்டா் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆா். பாடல்கள் மட்டும் இடம் பெறுகிறது.

 

தமிழக கவா்னா், தமிழக முதல்வா், தமிழக துணை முதல்வா், தமிழக செய்தித்துறை அமைச்சா், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவா் ஆகியோருக்கும் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை, கில்டு, டிஜி்ட்டல் தயாரிப்பாளா்கள் சங்கம், தென்னிந்திய நடிகா் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளனம், திரைப்பட இயக்குனா்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம், விநியோகஸ்தா்கள் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கும் கடிதம் கொடுத்துள்ளோம்.

 

வரும் ஜனவரி மாதம் (2018) 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணா் அரங்கத்தில் இந்த முப்பெரும் விழா முழுக்க முழுக்க திரைத்துறை சம்பந்தப்பட்ட விழாவாக நடத்த திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்.

 

இந்த சந்திப்பில், தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜயமுரளி, துணைத் தலைவர்கள் வி.கே.சுந்தர், பி.டி.செல்வகுமார், இணை செயலாளர்கள் நிகில் முருகன், யுவராஜ் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.