Dec 13, 2017 05:30 AM

பள்ளி பாடப்புத்தகத்தில் விஜய் புகைப்படம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

பள்ளி பாடப்புத்தகத்தில் விஜய்  புகைப்படம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய்க்கு பல லட்சம் ரசிகர்கள் உண்டு. ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வரும் விஜய், நடிப்பில் தீபாவளி வெளியான மெர்சல் மாபெரும் வெற்றி பெற்றதோடு, ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

 

இந்த நிலையில், சிபிஎஸ்இ 3வது வகுப்பு பாடப்புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் பாரம்பரியம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்த வரியில் வேஷ்டி சட்டை தான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, வேலாயுதம் படத்தில் விஜய் வேஷ்டி சட்டையுடன் நடந்து வரும் போட்டோவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.