Dec 15, 2017 07:12 AM

என் வரலாற்றில் ‘விக்ரம் வேதா’ படத்திற்கு முக்கிய இடம் உண்டு - விஜய் சேதுபதி

என் வரலாற்றில் ‘விக்ரம் வேதா’ படத்திற்கு முக்கிய இடம் உண்டு - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சஷிகாந்த் தயாரித்த இப்படத்தில், கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் 100 வது நாள் விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது.

 

இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் - காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

 

படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவருக்கும் பாராட்டு பத்திரமும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “எனக்கு தெரிந்தவரை, ’தர்மதுரை’ படத்திற்கு பிறகு, எனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக `விக்ரம் வேதா' அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் `விக்ரம் வேதா'. ஆனால் இந்த படத்தால் சுயநலமாக நான் அடைந்தது என்னவென்றால், மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். என்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் - காயத்ரிக்கு நன்றி. அதே போல் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வரலாறு என்று ஒன்று எழுதினால் அதில் இந்த படம் முக்கிய இடத்தில் இருக்கும்.” என்றார்.