Dec 16, 2017 01:05 PM

விலை உயர்ந்த லம்பார்கினி கார் வாங்கிய கோலிவுட் நடிகர்!

விலை உயர்ந்த லம்பார்கினி கார் வாங்கிய கோலிவுட் நடிகர்!

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே, விலை உயர்ந்த சொகுசு காரான லம்பார்கினி (Lamborghini)  புதிய மாடல் காரை வாங்கியுள்ளார்.

 

’எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த ஆர்.கே, ‘அவன் இவன்’ மற்றும் ‘ஜில்லா’ படத்தில் வில்லனாக மிரட்டியவர் தொடர்ந்து பல படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சிலர் மட்டுமே வைத்திருக்கும் விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு காரான லம்பார்கினியின் புதிய மாடலான Lamborghini Gallardo lp550-2 காரை ஆர்.கே வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 2 கோடியே 18 லட்சம் ஆகும்.