Jul 15, 2018 05:23 AM

நடிகர்கள் சிகரெட் பிடிப்பது தவறில்லை! - விஜய் சேதுபதி பதில்

நடிகர்கள் சிகரெட் பிடிப்பது தவறில்லை! - விஜய் சேதுபதி பதில்

திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெடெ பிடிப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விஜயின் சர்கார் படத்தின் போஸ்டரில் இடம்பெற்ற விஜய் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

 

மேலும், டாக்டர்.ராமதாஸ் விஜயை எச்சரிக்கும் விதத்தில் பொது கூட்டம் ஒன்றில் பேசினார். ஆனால், விஜய் தரப்பு எந்த வித விளக்கமும் அளிக்காமல், ராமதாஸின் பேச்சுக்கு பதில் ஏதும் கூறாமல் அமைதி காத்து வந்த நிலையில், சிம்பு அன்புமணியுடன் விவாதம் நடத்த தயார், என்று கூறினார்.

 

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பது தவறில்லை. அதனால் யாரும் கெட்டுப் போக மாட்டார்கள், என்று கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், “எனது அப்பா சிகரெட் பிடித்தார் என்பதால் அவருடன் மூன்று மாதங்களாக பேசாமல் இருந்தேன், எந்த காலத்திலும் சிகரெட் புகைக்க கூடாது என்ற முடிவில் இருந்த நான் கல்லூரியில் அந்த பழக்கத்தை கற்றுக்கொண்டேன்.

 

சிகரெட் பிடித்தால் உடல் நிலை கெட்டுப்போகும், அதனால் அதை தவிர்ப்பது நல்ல விஷயம் தான். ஆனால், சினிமாவில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதால் மற்றவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வில்லனை காட்டும் போது, அவனுக்கு இருக்கும் பழக்கங்களை காட்ட வேண்டும் என்று வரும் போது சிகரெட் பிடிக்கும் காட்சிகளை வைப்பதில் தவறில்லை.” என்று கூறினார்.