Aug 09, 2018 03:26 PM

மூத்த நாடக நடிகர் எ.ஜெயராம் மரணம் - நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி

மூத்த நாடக நடிகர் எ.ஜெயராம் மரணம் - நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மூத்த நாடக நடிகருமான எ.ஜெயராமன் நேற்று ( ஆகஸ்ட் 7) இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.

 

50 ஆண்டுக்கும் மேல் நாடக நடிகராக வாழ்க்கை பயணம் நடத்திய இவர் தேவி நாடக சபா மற்றும் ஆர்.எஸ்.மனோகரின் நேஷ்னல் தியேட்டரில் நடிகராக பணியாற்றிய கலைஞர் ஆவார். அவருக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் எம்.நாசர், துணை தலைவர் கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்  கோவை சரளா, சங்கீதா, பசுபதி, விக்னேஷ், ஹேமச்சந்திரன், ஸ்ரீமன், ஏ.எல்.உதயா ஆகியோர் தேனாம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.