Aug 24, 2017 06:41 PM

’மெட்ரோ’ பட இயக்குநருக்கு திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து

’மெட்ரோ’ பட இயக்குநருக்கு திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து

‘மெட்ரோ’ பட புகழ் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆனந்த கிருஷ்ணன் - ஸ்ரீலேகா திருமணம் சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (ஆக.23) மதுரை பி.டி.ஆர் ஹாலில் நடைபெற்றது.

 

இதில், நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.சி.குகநாதன், நடிகர்கள் அசோக் செல்வன், கிரிஷ், இசையமைப்பாளர் ஜோகன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.