Aug 26, 2017 07:49 AM

விஷாலுக்கு அஜித்தை கண்டால் பயமா? - தியேட்டர் உரிமையாளர் கேள்வி!

விஷாலுக்கு அஜித்தை கண்டால் பயமா? - தியேட்டர் உரிமையாளர் கேள்வி!

நேற்று முன் தினம்  வெளியான அஜித்தின் ‘விவேகம்’ படத்திம் முதல் நாளில் ஒரு டிக்கெட் ரூ.100 முதல் 2000 வரை விற்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சில இடங்களில் அஜித் ரசிகர்களுக்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும் மோதல் கூட ஏற்பட்டது.

 

இந்த நிலையில், திரையரங்க உரிமையாளரான திருப்பூர் சுப்பிரமணியம், ‘விவேகம்’ படத்தின் டிக்கெட் விலை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், ‘பாகுபலி’ போன்ற படங்களுக்கு நியாயமான விலையில் டிக்கெட் விற்றதால் தான் மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. ஆனால், ‘விவேகம்’ படத்தின் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்றதால் ரசிகர்கள் மட்டுமே தியேட்டருக்கு வந்தார்களே, அதவிர ரசிகர்கள் அல்லாத யாரும் படம் பார்க்க வரவில்லை. மேலும், இவ்வளவு அதிகமாக டிக்கெட் விலை இருந்தால் எப்படி மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களின் டிக்கெட்டை இப்படி அதிக விலைக்கு விற்பதை ஏன் தயாரிப்பாளர் சங்கம் தட்டி கேட்பதில்லை என்று கூறியவர், ஏன் அந்த நடிகரை கண்டால் பயமா? பெரிய நடிகர்களை கண்டால் தயாரிப்பாளர் சங்கம் பயப்படுகிறதா?

 

 என்று கேள்வி எழுப்பியுள்ளனவர், திரையரங்க உரிமையாளர்களைப் பற்றி வாட்ஸ்-அப்பில் என்னவெல்லாமோ பேசி வரும் தயாரிப்பாளர் சங்கம், இப்பிரச்சினைப் பற்றி ஏன் பேச மறுக்கின்றது.

 

 ஒவ்வொரு திரையரங்க உரிமையாளரிடம் முன்பணம் என்ற பெயரில் ரூ.40 லட்சம் வரை கேட்கிறீர்கள். அவ்வளவு முன்பணம் வாங்கினீர்கள் என்றால், இவ்வளவு டிக்கெட் விலை விற்காமல் என்ன செய்வார்கள்? என்றும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

மொத்தத்தில், திருப்பூர் சுப்பரமணியம் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலிடம் மறைமுகமாக, அஜித்தை பார்த்தால் பயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பொறுத்திருந்து பார்க்கும் இதற்கு விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை.