Sep 03, 2017 06:46 AM

’மெர்சல்’ வியாபாரத்தில் சறுக்கல்? - அதிர்ச்சியில் தயாரிப்பு தரப்பு!

’மெர்சல்’ வியாபாரத்தில் சறுக்கல்? - அதிர்ச்சியில் தயாரிப்பு தரப்பு!

அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் படு தோல்வி அப்படக்குழுவினரை மட்டும் அதிர்ச்சியாக்கவில்லை, ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சினிமா வியாபார புலிகளும் ‘விவேகம்’ படத்தால் பெரும் நஷ்ட்டம் என்று வெளிப்படையாக கூறினாலும், தற்போது 100 கோடியை தாண்டிய வசூல், பட்டையை கிளப்பும் வசூல் என்று விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தாலும், விவேகத்தின் தோல்வி பிற முன்னணி ஹீரோக்களையும் பீதியடைய செய்துள்ளது.

 

விவேகத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து ‘மெர்சல்’ படத்தின் வியாபாரம் என்ன ஆகுமோ!, என்று பதறிய அப்படத்தின் தயாரிப்பு தரப்பினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் விநியோகதஸ்கள் விலை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

விவேகம் படத்தைக் காட்டிலும் அதிக பொருட்ச் செலவில் உருவாகியிருப்பதாக கூறப்படும் ‘மெர்சல்’ படத்தின் வியாபாரம் தொடர்பாக, தயாரிப்பு தரப்பினருக்கும் விநியோகஸ்தர்கள் தரப்பினருக்கும் இடையே சமீபத்தில் சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. இதில் கலந்துக்கொண்ட விநியோகஸ்தர்கள் விவேகம் படத்தின் தோல்வியை உதாரணம்  காட்டி மெர்சலுக்கு குறைவான விலையை நிர்ணயித்தார்களாம். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பு தரப்பு, ஆளே விடுங்க, நாங்களே பார்த்துக்குறோம், என்று கூறியதோடு, தமிழகம் முழுவதும் படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாம்.

 

படத்தின் விளம்பரம் தொடர்பாக புதிய யுக்திகளை கையாண்டுக் கொண்டிருக்கும் ஸ்ரீதேனாண்டால், படத்தின் விளம்பரத்தில் மிக முக்கியமாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை நம்பியிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.