Sep 07, 2017 06:10 AM

‘விவேகம்’ படத்தால் எவ்வளவு நஷ்ட்டம் தெரியுமா?

‘விவேகம்’ படத்தால் எவ்வளவு நஷ்ட்டம் தெரியுமா?

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான அஜித்தின் ‘விவேகம்’ மிகப்பெரிய சறுக்களை சந்தித்துள்ளது. படம் வெளியான முதல் காட்சிக்குப் பிறகே படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால், அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்கள் கூட்டம் குறைந்துவிட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

 

இருப்பினும், சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து சிறப்பான வசூல் வந்துக்கொண்டிருக்க, சென்னை பாக்ஸ் ஆபிஸில் ‘பாகுபலி 2’ இரண்டு வாரங்கள் முடிவில் செய்த கலெக்‌ஷனைக் காட்டிலும் ’விவேகம்’ அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை நிகழ்த்தியது. மேலும், ரூ.150 கோடி வசூலித்த்டுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், விவேகத்தின் வசூல் சில இடங்களில் சிறப்பாக இருந்தாலும், ஒட்டு மொத்த வியாபரம் என்று பார்த்தால் பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாக திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தெரிவித்துள்ளனர். மேலும், விவேகம் படத்தால் ஒட்டு மொத்தமாக ரூ.15 கோடி முதல் 28 கோடி வரை நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறியுள்ளார்.

 

விவேகம் படத்தின் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் இந்த நஷ்ட்டம் மிகப்பெரிய இழப்பு என்பதால், நஷ்ட்டம் அடைந்தவர்களுக்கு நடிகர் அஜித்குமார் இழப்பீடு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த சென்னை அல்லது திருச்சியில் கூட்டம் நடத்த இருப்பதாகவும் திருச்சி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.