Sep 08, 2017 07:05 AM

விஷால் நடித்த படங்களிலேயே ‘துப்பறிவாளன்’ ரொம்ப ஸ்பெஷல்! - ஏன் தெரியுமா?

விஷால் நடித்த படங்களிலேயே ‘துப்பறிவாளன்’ ரொம்ப ஸ்பெஷல்! - ஏன் தெரியுமா?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்த பல அறிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

 

இதுவரை விஷால் நடித்த படங்களிலேயே ‘துப்பறிவாளன்’ ரொம்ப ஸ்பெஷல் படம் என்று சொல்லலாம், காரணம் விஷால் நடிக்கும் முதல் பாடல்கள் இல்லாத படம் இந்த ‘துப்பறிவாளன்’. அதுமட்டும் அல்ல, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன், பஞ்ச் வசனங்களையும் பேசி நடித்து வந்த விஷால், இந்த படத்தில் அளவான வசனங்கள் பேசி, தனது நடிப்பை வேறு விதமாக இப்படத்தில் காண்பித்துள்ளார். மொத்தத்தில், இந்த படத்தில் விஷால் இயக்குநர் மிஷ்கினாகவே மாறியிருக்கிறாராம்.

 

கணியன்பூங்குன்றன் என்ற கதாபாத்திரத்தில் துப்பறிவாளனாக ரொம்ப அமைதியான முறையில் விஷால் இப்படத்தில் நடித்திருந்தாலும், அவர் செய்யும் சில அட்வென்ச்சர் சமாச்சாரங்கள் படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. டிடெக்டிவ் ஜானர் படமான இப்படம் ‘ஷெர்லாக் ஹோம்லெஸ்’ (Sherlock Holmes) மாதிரியான ஒரு படமாகவும், பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் நடித்த துப்பறியும் படம் போன்றும், தெலுங்கில் கிருஷ்ணா நடித்த துப்பறியும் படங்கள் போன்ற ஒரு படமாக இருக்குமாம்.

 

ரசிகர்களை இரண்டு மணி நேரம் கட்டிப்போடுவது போல, படம் விறுவிறுப்பாக நகர்வதால் இப்படத்திற்கு பாடல்கள் தேவைப்படவில்லை, என்று கூறிய விஷால், தனது சினிமா கேரியரில், நான் நடித்த முழு நீள ஸ்டைலிஷான படம் என்றா அது ‘துப்பறிவாளன்’ தான், என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

 

பிரசன்னா, வினய், பாக்கியராஜ், ஆண்ட்ரியா ஆகியோரும் விஷாலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறதாம்.

 

படம் குறித்து மேலும் கூறிய விஷால், “இப்படத்திற்காக மிஷ்கினின் ஸ்டைல் கண்ணாடியை மாட்டிக் கொண்டு நடித்திருக்கிறேன். மிஷ்கினுக்கு என்னுடைய உடல் மொழி ஸ்டைல் என்று அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று ஆசை. துப்பறிவாளனில் வரும் சைனீஸ் ஹோட்டல் சண்டை காட்சி ரசிகர்களை மிரட்டும். இந்த காட்சியில் நடிக்க வியட்நாமிலிருந்து ஆக்‌ஷன் கலைஞர்கள் வந்தார்கள். சண்டை காட்சி இப்படி தான் இருக்க வேண்டும் என்று பேப்பரில் வரைந்து அதை வடிமைத்தவர் இயக்குநர் மிஷ்கின் தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் செகண்ட் ஹாப்பில் பாடல் ஒன்றை வைத்திருந்தால் ரசிகர்கள் என்னை தான் திட்டியிருப்பார்கள். பி அண்ட் சி செண்டர் ரசிகர்களை மனதில் வைத்து விஷால் இப்படி செய்துவிட்டார் என்று. படத்தில் ஒரே ஒரு தீம் பாடல் மட்டும் உள்ளது. 

 

இப்படத்தில் அனு இமானுவேல் பிக்-பாக்கெட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் பாக்யராஜ் சாரை நீங்கள் மூன்றாவது ஷாட்டில் தான் கண்டுபிடிப்பீர்கள் .அவர் இதுவரை பண்ணாத புதுமையான ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வினய் தான் படத்தின் மெயின் வில்லன். பட்த்தில் 6.2 ஹீரோ - 6.2 வில்லன்.

 

அவன் இவன் வந்ததால் தான் எனக்கு பாண்டிய நாடு என்ற ஒரு படம் வந்தது. பாண்டிய நாடு படம் வந்ததால் தான் இயக்குநர் திரு எனக்கு நான் சிவப்பு மனிதன் என்ற கதையை எடுத்துக்கொண்டு வந்தார். துப்பறிவாளன் வந்தால் இன்னும் புதுமையான நல்ல படங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன். அடுத்து இரும்புத்திரை, சண்டைக்கோழி 2, டெம்பர் ரீமேக் என்று வித்தியாசமான படங்கள் வர உள்ளது. 

 

நான் இயக்குநர் மிஷ்கினை விலைக்கு வாங்கிவிட்டேன், அவர் அடுத்து இயக்கும் படம் VFF க்கு தான். அவர் தொடர்ந்து என்னை வைத்து படங்கள் இயக்குவார். துப்பறிவாளனில் கடைசி 20 நிமிடம் மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். நம்ம ஊரிலேயே நல்ல லொக்கேஷன்கள் உள்ளது, கடைசி இருபது நிமிடங்கள் அமேசான் காட்டில் எடுக்கப்பட்ட காட்சி போல் இருக்கும்.

 

இனிமேல் ஏழைகளுக்கு உதவி செய்வது போல், பாட்டியை தூக்கிக்கொண்டு போவது போல காட்சிகளில் நடித்து மக்களை ஏமாற்ற முடியாது, நான் கோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாதித்து இருப்பேன். இப்போது நான் கோடிகளை சம்பாதிப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் திரையுலகமே இருந்திருக்காது. திரையுலகத்தை காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள். இரண்டு படம் தள்ளிப்போனது எனக்கு லாஸ் தான். நான் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று உழைக்காமல் இருந்திருந்தால் பல படங்களில் நடித்து 20 கோடிக்கு மேல் சம்பாதித்திருப்பேன். ஆனால், திரையுலகம் தான் இப்போது எனக்கு மிகவும் முக்கியம்.” என்றார்.