Sep 09, 2017 07:39 AM

அரசியல் கருத்து கணிப்பு - ரஜினியை வீழ்த்திய கமல்ஹாசன்!

அரசியல் கருத்து கணிப்பு - ரஜினியை வீழ்த்திய கமல்ஹாசன்!

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியலில் ஈடுபட தீவிரம் காட்டி வரும் நிலையில், இருவரில் அரசியலில் யார் அதிகம் சாதிப்பார்கள், என்ற கோணத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ரஜினியை வீழ்த்தி கமல்ஹாசன் வெற்றி பெற்றுள்ளார்.

 

பண்பாட்டு மக்கள் தொடர்பகம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து, இது தொடர்பாக மக்களிடம் நடத்திய ஆய்வில், தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தால் அல்லது மாற்றுக்கட்சியில் இணைந்தால் சினிமாவைப் போல சாதிக்க வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

 

ரஜினி குறித்து கருத்து தெரிவித்த மக்களில், 13 சதவீதம் பேர் அரசியலில் அவர் சாதிப்பார் என்றும், 75 சதவீதம் பேர் அரசியல் அவரால் சாதிக்க முடியாது என்றும், 10 சதவீதம் பேர் கருத்து சொல்ல விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர்.

 

அதே சமயம் கமல்ஹாசன் குறித்து கருத்து தெரிவித்த மக்களில், 29 சதவீதம் பேர் அவர் அரசியலில் சாதிப்பார் என்று கூறியுள்ளனர். 61 பேர் அரசியலில் கமலால் சாதிக்க முடியாது என்றும், 10 சதவீதம் பேர் கருத்து சொல்ல விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

 

அதே சமயம், தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்ற கேள்விக்கு 41 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலின் என்றும், 21 சதவீதம் பேர் ரஜினி என்றும், 13 சதவீதம் பேர் கமல்ஹாசன் என்றும் கூறியுள்ளனர். அன்புமணிக்கு 7 சதவீதமும், தினகரனுக்கு 10 சதவீதமும் வாக்குகள் கிடக்க, ஓ.பன்னீர் செல்வத்திற்கு 1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.