Sep 09, 2017 09:39 AM

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் எழுதிய ‘திசை ஒளி’ புத்தகம் - பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார்

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் எழுதிய ‘திசை ஒளி’ புத்தகம் - பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார்

‘கனவு மெய்ப்பட வேண்டும்’, ‘பெரியார்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சி.ஜெ.ராஜ்குமார், ஒளிப்பதிவுத் துறை குறித்தும், டிஜிட்டல் ஒளிப்பதிவு குறித்தும் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

தற்போது ‘திசை ஒளி’ என்ற தனது 6 வது புத்தகத்தை சி.ஜே.ராஜ்குமார் வெளியிட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகளுக்கான அட்வான்ஸ் லைட்டிங் தொழில்நுட்பம் பற்றிய அறிய பல தகவல்களைக் கொண்ட இந்த புத்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் லைட்டிங்கை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டுள்ளது.

 

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா எளிமையான முறையில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் தென்னிந்தியா ஒளிப்பதிவாளர்கள் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம் கலந்துக்கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, செயலாளர் பி.கண்ணன் பெற்றுக் கொண்டார். ஒளிப்பதிவாளர் டி.கண்ணன் உடன் இருந்தார்.

 

’திசை ஒளி’ புத்தகம் குறித்து பேசிய பி.சி.ஸ்ரீராம், “திசை ஒளி புத்தகம் அனைத்து துறை சினிமாக்காரர்களுக்கும், சினிமா விரும்பிகளுக்கும், திரைத்துறை சார்ந்து படிக்கும் மாணவர்களுக்கும் மிகவும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாகும். இந்த புத்தகத்தை எழுதிய சி.ஜெ.ராஜ்குமாருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.