Sep 18, 2017 07:29 AM

உலக சாதனை அஜித்தை வியாபாரத்தில் ஓரம் கட்டிய விஜய்!

உலக சாதனை அஜித்தை வியாபாரத்தில் ஓரம் கட்டிய விஜய்!

கூட்டமே இல்லாமல் தியேட்டர் முழுவதும் ஈ பறந்துக் கொண்டிருந்தாலும், ஒரே நாளில் பத்து கோடி, ஒரே வாரத்தில் நூறு கோடி, என்று வசூல் விபரத்தை கூறி நம்மை கிறுகிறுக்க செய்யும் தயாரிப்பாளர்கள், திரை மறைவில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்திற்காக சம்மந்தப்பட்ட நடிகர்களிடம் அடுத்த கால்ஷீட் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

 

அப்படி ஒரு நிலை அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் நல்லபடியான வசூலை ஈட்டினாலும் ஒட்டு மொத்த படம் சுமார் 30 சதவீதம் நஷ்ட்டத்தை ஏற்படுத்தும் என்பது சினிமா வியாபாரிகளின் கணிப்பு.

 

வியாபாரட்தில் நஷ்ட்டத்தை ஏற்படுத்தினாலும், உலக அளவில் விவேகம் சாதனை புரிந்துள்ளது. அதாவது யுடியூபில் எந்த ஒரு திரைப்படத்தின் டிரைலரும் வாங்காத லைக்குகளை ‘விவேகம்’ வாங்கி, ஹாலிவுட் படங்களையும் பின்னுக்கு தள்ளி சாதனையை நிகழ்த்தியுள்ளது.

 

உலக அளவில் சாதனை புரிந்த அஜித் உள்ளூர் வியாபரத்தில் தவறவிட்ட சாதனையை தனது ‘மெர்சல்’ மூலம் விஜய் கைப்பற்றியுள்ளார்.

 

விவேகம் படத்தை விட அதிகமான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ‘மெர்சல்’ படத்தின் வியாபாரமும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 132 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் வியாபாரம் தொடங்கும் போது, தயாரிப்பு தரப்பு நிர்ணயித்த விலையை கேட்டு விநியோகஸ்தர்கள் பின் வாங்கினார்கள். இதனால், தயாரிப்பு தரப்பே சொந்தமாக வெளியிட முடிவு செய்தது.

 

ஆனால், விஜய் வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர், என்பதால் எதாவது ஏடாகூடம் நடந்தால் விஜயிடம் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம், என்ற நம்பிக்கையில் மெர்சல் படத்திற்கு தயாரிப்பு தரப்பு வைத்த விலையை, மறுப்பு ஏதும் இன்றி வினியோகஸ்தர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்களாம். அதுமட்டும் அல்லாமல், படம் தொடர்பான அனைத்து வியாபாரத்தின் விலைகளிலும், விவேகத்தை காட்டிலும் மெர்சலுக்கு 30 சதவீதம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

 

விஜய் மீது உள்ள நம்பிக்கையில், இந்த கூடுதல் விலையை வியாபாரிகள் ஏற்றுக்கொண்டதால், உலக சாதனை புரிந்த அஜித்தை, உள்ளூர் வியாபரத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளார் விஜய்.