Sep 20, 2017 06:51 AM

விஜயால் கஷ்ட்டப்பட்ட பிரபல நடிகை!

விஜயால் கஷ்ட்டப்பட்ட பிரபல நடிகை!

காமெடி, நடிப்பு, ஆக்‌ஷன், ரொமான்ஸ் காட்சிகள் என்று அனைத்திலும் ஆல் ரவுண்டரான விஜய், நடனத்தில் ஏ ஒன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழ் சினிமாவில் நல்லா நடனம் ஆட தெரிந்த முன்னணி ஹீரோக்களில் முன்னணியில் இருக்கிறார்.

 

இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தும், நடனமும் ஆடியுள்ள காஜல் அகர்வால், அவரால் ரொம்ப கஷ்ட்டப்பட்டுவிட்டாராம்.

 

’துப்பாக்கி’, ‘ஜில்லா’ என்று இரண்டு முறை விஜயுடன் ஜோடி போட்ட காஜல் அகர்வால் மூன்றாவது முறையாக ‘மெர்சல்’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறார். இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில்,  விஜயுடன் நடிக்கும் அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய காஜல் அகர்வால், “விஜய்யுடன் நடனமாடுவது நல்ல அனுபவம். அதேசமயம் கொஞ்சம் கஷ்டமானதும் கூட. சில நடன அசைவுகளை ரொம்ப வேகமாக செய்து விடுவார். அதனால், அந்த மாதிரியான நடன அசைவுகளுக்கு முன்பாக அவருடன் இணைந்து ரிகர்சல் பார்த்துக்கொள்வேன். இல்லையேல், பல ரீ-டேக்குகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.” என்று தெரிவித்துள்ளார்.