Sep 22, 2017 07:21 PM

’மெர்சல்’ படத்திற்கு நீதிமன்றம் தடை - முழு பின்னணி!

’மெர்சல்’ படத்திற்கு நீதிமன்றம் தடை - முழு பின்னணி!

விஜயின் ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்படத்திற்கு விளம்பரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

ராஜேந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததோடு, அந்த தலைப்பில் தனது இளையமகனை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

 

நடிகர் நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களுக்கு முன் பணம் கொடுத்து, படத்தின் வேலைகளை விரைவில் தொடங்க உள்ள அவர், விஜய் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால், தனது படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ‘மெர்சல்’ என்ற வார்த்தைக்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் டிரேட் மார்க் வாங்கியிருப்பதால் தனது படத்திற்கு சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து, தயாரிப்பாளர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, அக்டோபர் 3 ஆம் தேதி வரை ‘மெர்சல்’ தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.