Sep 22, 2017 07:43 PM

’மெர்சல்’ இணையத்தில் வெளியாகும் - நெட்டிசனின் மிரட்டலால் படக்குழு அதிர்ச்சி!

’மெர்சல்’ இணையத்தில் வெளியாகும் - நெட்டிசனின் மிரட்டலால் படக்குழு அதிர்ச்சி!

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘மெர்சல்’ மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது படமான இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இதற்கிடையே, தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், ‘மெர்சல்’ பட்த்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில், வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ‘மெர்சல்’ பட தலைப்பை விளம்பரம் செய்யக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

நீதிமன்ற தடை ஒரு பக்கம் இருக்க, மேலும் ஒரு பெரிய பிரச்சினை ‘மெர்சல்’ படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

‘மெர்சல்’ படம் வெளியான முதல் நாளே அதன் தெளிவான வீடியோ இணையத்தில் வெளியிடப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் சார்பில் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் இந்த மிரட்டலால் படக்குழுவினர் பெரும் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழ்ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்கள், திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் அதே நாளில், சட்டவிரோதமாக இணையத்திலும் வெளியிட்டு வருகிறார்கள். இதனால் தமிழ்த் திரையுலகம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனை தடுக்க விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இணையத்தில் படங்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.