Sep 25, 2017 08:56 AM

ஓடாது என தெரிந்தும் ‘ஸ்பைடர்’ படத்தை வெளியிடும் லைகா? - காரணம் இதுதான்!

ஓடாது என தெரிந்தும் ‘ஸ்பைடர்’ படத்தை வெளியிடும் லைகா? - காரணம் இதுதான்!

மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்’ தெலுங்கு மற்றும் தமிழி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இப்படம் மகேஷ் பாபுவின் நேரடி தமிழ்ப் படம் என்றும், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகிறார் என்றும், தயாரிப்பு விளம்பரப்படுத்தி வந்தாலும், தமிழக ரசிகர்கள் என்னவோ ‘ஸ்பைடர்’ ரை தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் படமாகவே பார்கிறார்கள்.

 

இதற்கிடையே, ‘ஸ்பைடர்’ படம் ஓடாது என தெரிந்தே தான் அப்படத்தை லைகா வெளியிடுவதாகவும், இதுவரை லைகா தயாரித்த அல்லது வெளியிட்ட படங்கள் எதுவும் போட்ட பணத்தை கூட எடுத்ததில்லை. அப்படி இருந்தும் இப்படி தொடர்ந்து அந்நிறுவனம் தமிழ் சினிமாவில் கோடி கோடியாய் பணத்தை கொட்டுவதற்கு பின்னணியில் பலமான காரணம் இருப்பதாகவும், மூத்த பத்திரிகையாளர் கோடாங்கி என்பவர் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கிடையே, திரையரங்க உரிமையாளர்களும் ஸ்பைடர் படத்தை டப்பிங் படம் என்று கருதி, வெளியிடவும் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராஜு மகாலிங்கம், தமிழகம் முழுவதும் 550 திரையரங்குகளில் ‘ஸ்பைடர்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் மொத்த தியேட்டரின் எண்ணிக்கை ஆயிரத்துக்குள்தான். ஸ்பைடர் வரும் போது ஹர ஹர மகாதேவி , கருப்பன் படங்களும் வருகிறது. ஹர் ஹர மகாதேவி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட தியேட்டர்கள் இருக்கிறது அதில் தயாரிப்புக்குத்தான் முதலிடம் தருவார்கள். அடுத்து விஜய் சேதுபதியின் கருப்பன். விநியோகஸ்தர்கள் நஷ்டமடை யாத ஹீரோ ஆக வளர்ந்து வரும் விஜய சேதுபதி படம் குறிப்பிட்ட தியேட்டர்களை பிடிக்கும். தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடிப்பில் ஓடிக்கொண்டிருக்கும் துப்பறிவாளன் பிடித்துக் கொண்ட தியேட்டர்கள் அதோடு கடந்த வெள்ளி 11 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது இப்படி படங்கள் அதிகம் இருக்கும் போது ராஜூ மகாலிங்கம் சொல்வது போல் தியேட்டர்கள் கிடைக்குமா?

 

அப்படியே  கிடைத்த தியேட்டரில் ஸ்பைடர் ஓடி வசூல் வந்து விடுமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஆக  வாங்கிய விலை வசூல் ஆக வாய்ப்பு இல்லை என தெரிந்தும் லைகா நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியதற்கு காரணம், உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு தனி மார்க்கெட் உண்டு. அதே நேரம் லைகா நிறுவனத்துக்கு உலக அளவில் மோசமான பெயர் தான் இருக்கிறது. பல நாடுகளில் மோசடி வழக்குகள், பங்குதாரர்கள் சட்ட சிக்கல் என பல சிக்கல்களோடு தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த ராஜ பக்‌ஷேவின் பினாமி நிறுவனம் என்கிற குற்றச்சாட்டும் லைகா நிறுவனம் மீது உண்டு. இந்த அவப்பெயர்களை துடைக்கும் விதமாகத்தான் நஷ்டம் என தெரிந்தும் தமிழ் சினிமாவில் கோடிகளை கொட்டி வருகிறது லைகா.

 

இது நஷ்ட கணக்கா அல்லது கருப்பை வெள்ளை ஆக்கும் முயற்சியா என்றும் ஒரு கேள்வியும் மக்கள் மனதில் எழாமல் இல்லை. இப்பேர் பட்ட லைகாவின் பப்ளிசிட்டிக்கும், பிரமாண்டமான தோற்றத்துக்கும் நம்பி கால் பதிக்கும் மகேஷ் பாபு எதிர் பார்க்கும் வெற்றியை லைகாவின் நிறுவனம் பெற்றுத் தருமா என்றால் சந்தேகமே.!