Oct 07, 2017 05:38 AM

ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார்

ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்று வரும் ஜி.வி.பிரகாஷ்குமார், சமூக அக்கறையிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட விவசாயிகளின் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டவர், மாணவி அனிதாவின் மரணத்திற்கு முதல் ஆளாக நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

 

சமூக வலைதளங்களிலும் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது ஏழ்மையான மாணவி ஒருவரது மருத்துவ படிப்புக்கு பண உதவி செய்துள்ளார்.

 

சுகன்யா என்ற மாணவி மருத்துவ படிப்பை படித்து வந்திருக்கிறார். ரூ.45 லட்சம் செலவு செய்து படித்து வந்த மாணவியின் தந்தை திடிரேன மரணம் அடைந்துவிட்டதால், இந்த ஆண்டுக்கான கட்டணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் அவர் கல்லூரில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டார்.

 

இந்த நிலையில் மாணவியின் மருத்துவ படிப்பு முடியும் வரை தேவைப்படும் உபகரணங்கள், புத்தகங்கள் ஆகிய செலவுகள் முழுவதையும் தான் ஏற்று கொள்வதாக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், மாணவி சுகன்யாவை நேரில் சந்தித்து கூறியுள்ளார். இது ஒரு பெரிய உதவி இல்லை என்றும் இது தனது கடமை என்றும் கூறிய ஜி.வி.பிரகாஷ், மாணவி சுகன்யா மருத்துவ படிப்பை முடித்தவுடன்