Oct 11, 2017 07:25 PM

விஷால் போட்ட தடை - உடைத்தெரிய தயாராகும் விஜய்!

விஷால் போட்ட தடை - உடைத்தெரிய தயாராகும் விஜய்!

தமிழக அரசின் கேளிக்கை வரிக்கை ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் எதிர்ப்பு தெரிவித்தாலும், திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால், விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.6) முதல் புதுப்படங்களை வெளியிட கூடாது என்று தடை போட்டுள்ளது.

 

விஷாலின் இந்த தடையால் கடந்த வாரம் வெளியாக இருந்த சுமார் 5 படங்கள் முடங்கியுள்ள நிலையில், 18 ஆம் தேதி ‘மெர்சல்’ வெளியாவதால், வேறு எந்த புது படங்களும் வெளியாகமல் இருக்கின்றன.

 

இதற்கிடையே, கேளிக்கை வரி குறுத்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் தடை தொடர்ந்துக்கொண்டே இருக்க, ‘மெர்சல்’ வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ஆனால், ’மெர்சல்’ ரிலிஸில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை, என்ற ரீதியில், அப்பட்த்தின் தயாரிப்பாளர் அறிவித்தபடி அக்டோபர் 18 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். மேலும், அன்றைய தினம் விஷாலின் தடை தொடர்ந்தாலும், அதை உடைத்தெரிந்து படத்தை வெளியிடும் முடிவிலும் அவர் இருக்கிறாராம். அவரது இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் ‘மெர்சல்’ ரிலீஸ் தேதி குறித்து தினமும் விளம்பரத்தை வெளியிட்டு அதை டிரெண்டாக்கியும் வரும் தயாரிப்பு தரப்பு, உலகம் முழுவதும் சுமார் 3300 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர். அதேபோல் தெலுங்கிலும் இதுவரை விஜயின் எந்த ஒரு படமும் வெளியாகாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் படம் வெளியாகிறது.

 

மொத்தத்தில், எந்த சிக்கலாக இருந்தாலும், எந்த தடையாக இருந்தாலும், அதை உடைத்தெறிய விஜய் தயாராக இருக்கிறாராம்.

 

அதே சமயம், ‘மெர்சல்’ ரிலீஸாவதற்கு முன்பாக கேளிக்கை வரி தொடர்பான பிரச்சினையை தீர்த்துவிடும் நோக்கில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.