Oct 16, 2017 06:43 AM

தற்கொலை செய்து கொள்வேன் - விஜயை மிரட்டிய தயாரிப்பாளர்!

தற்கொலை செய்து கொள்வேன் - விஜயை மிரட்டிய தயாரிப்பாளர்!

தொடர்ந்து பல சாதனைகளை செய்து வந்த விஜயின் ‘மெர்சல்’ தற்போது தொடர்ந்து வேதனைகளை அனுபவித்து வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது படமாகும்.

 

ஆரம்பத்தில் படத்திற்கு எதிராக உருவான அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்த தயாரிப்பு தரப்பினால், தற்போது விலங்குகள் நலவாரியத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை. இதனால் படம் வெளியாவதே கேள்விக்குரியானது.

 

சுமார் ரூ.130 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், படம் அறிவித்தது போல தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவில்லை என்றால், தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்ட்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. சொன்ன தேதியில் படம் வெளியானாலே, படம் நன்றாக இருந்தால் தான் அசலையே எடுக்க முடியும் என்ற தற்போதைய சூழலில், இப்படி ஒரு பிரச்சினை வந்ததால், தயாரிப்பு தரப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

பிரச்சினைகளை முடிக்க பல வழிகளில் தயாரிப்பு தரப்பு முயற்சித்தும் முடியாமல் போனதால் தான், நடிகர் விஜயே நேரடியாக இறங்கி, முதல்வரை சந்தித்து பிரச்சினையை முடிக்க முயற்சி செய்து வருகிறார்.

 

விஜய் நேரடியாக இந்த பிரச்சினையில் தலையிட, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் உரிமையாளர் முரளியின் தற்கொலை மிரட்டலே காரணம் என்றும் கூறப்படுகிறது.

 

”’மெர்சல்’ தீபாவளியன்று வெளியாகவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று விஜயிடம் முரளி கூறினாராம். இதனால் தான் விஜய் முதல்வரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ’மெர்சல்’ படத்திற்கு அனுமதி வழங்குவதற்காக ஆலோசிக்க, விலங்குகள் நலவாரியத்தின் சிறப்பு அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது. அநேகமாக இன்று பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.