Sep 26, 2017 11:33 AM

பரத் பெண் வேடத்தில் நடித்துள்ள ‘பொட்டு’

பரத் பெண் வேடத்தில் நடித்துள்ள ‘பொட்டு’

மாஸ் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்கள் தற்போது தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் படங்களில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதனபடி ‘கடுகு’ படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் வேடத்தில் நடித்த பரத், ‘பொட்டு’ படத்தின் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

மருத்துவ கல்லூரி பின்னணி திகில் படமாக உருவாகியுள்ள ‘பொட்டு’ படத்தில் பரத், நமிதா, இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமைய்யா, ஊர்வசி, மன்சூர் அலிகான், ஷாயாஜி ஷிண்டே, நான் கடவுள் ராஜேந்திரன் என பெரிய நட்சத்திர பட்டாளலே நடித்துள்ளனர்.

 

மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த  அகோரியாக நமீதா, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல, பரத்தும் ரொம்ப வித்டியாசமான வேடங்களில் நடித்துள்ளாராம். அதில் ஒரு வேடம் பெண் வேடம். முதல் முறையாக இந்த வேடத்தில் நடித்துள்ள பரத், நடிப்பில் மிரட்டியிருக்கிறாராம். 

 

வி.சி.வடிவுடையான் இயக்கியிருக்கும் இப்பட்த்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அம்ரீஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியிருப்பதோடு, பின்னணி இசையும் பாராட்டு பெரும் விதத்தில் அமைந்துள்ளது.

 

மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதோடு, காமெடி, அதிரடி ஹாரர் என்று இரண்டுமே கலந்திருப்பதோடு, படத்தின் கதையும் மக்களை கவரும் விதத்தில் அமைந்திருக்கிறதாக, இயகுநர் வி.சி.வடிவுடையான கூறியுள்ளார்.