Jun 20, 2018 03:51 AM

”நான் செத்தாலும் இங்கே தான் சாகணும்” - பிக் பாஸ் மும்தாஜ்!

”நான் செத்தாலும் இங்கே தான் சாகணும்” - பிக் பாஸ் மும்தாஜ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனைப் போலவே இரண்டாம் சீசனிலும் போட்டியாளர்களில் சிலர் ஓவராக நடிக்க தொடங்கிவிட்டதாக நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டார்கள். அதிலும் யாஷிகா ஓவியாவைப் போல வலம் வர வேண்டும் என்பதற்காக கொஞ்சம் ஓவராகவே நடிப்பதாகவும் கூறுகிறார்கள்.

 

இதற்கிடையே, நடிகை மும்தாஜ் சொல்லும் சில பெர்பக்‌ஷனால், அவரை முதல் சீசனின் எப்படி காயத்ரியோ அதுபோல இரண்டாவது சீசனில் மும்தாஜ் என்று சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.

 

ஆனால், இதை மறுத்திருக்கும் மும்தாஜின் அண்ணன் அஹமத், மும்தாஜ் எப்போதும் பர்பெக்‌ஷன் பார்ப்பவர் அது தான் அவரது இயல்பான நிலை. வீட்டில் கூட அவர் வேலையை அவரே தான் செய்துக் கொள்வார். யாராவது உதவி செய்வதாக சொன்னால் உடனே அவருக்கு கோபம் வந்துவிடும், என்று கூறியுள்ளார்.

 

மேலும், ”நான் செத்தாலும் தமிழ்நாட்டுலதான் சாகணும். மும்பையில் செத்தால் எனக்காக 50 சொந்தக்காரங்கதான் வருவாங்க. ஆனா, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவாங்க” என்று மும்தாஜ் ஒரு பேட்டியில் கூறியதை நினைவு கூர்ந்த அஹமத், தனக்குப் பெயரையும் புகழையும் கொடுத்த ரசிகர்களை அவங்க மறக்க மாட்டாங்க. அந்தக் குணமே, `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே அவங்களை 100 நாட்கள் இருக்க வைக்கும், என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.