Nov 13, 2018 08:55 AM

’காற்றின் மொழி’ படத்தை முதல் நாளே பார்க்கும் மாணவிகள்! - கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு

’காற்றின் மொழி’ படத்தை முதல் நாளே பார்க்கும் மாணவிகள்! - கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு

குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படங்களின் வருகை தற்போது குறைந்துவிட்ட நிலையில், கல்லூரி நிர்வாகமே ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படத்தை தங்களது மாணவிகள் முதல் நாளே பார்க்க ஏற்பாடு செய்திருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளதும்.

 

ஜோதிகா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில், தனஞ்ஜெயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காற்றின் மொழி’ வரும் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், நெய்வேலியில் உள்ள நேஷ்னல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தை வரும் 16 ஆம் தேதி, படம் வெளியாகும் முதல் நாளே, முதல் காட்சியை பார்க்க, அக்கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

 

இது குறித்து கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதிரிகளுமான வைரம் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் கூறுகையில், “நடிகை ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் , தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலுமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது உள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் யார் எதை பார்க்க வேண்டும் என்று தணிக்கை செய்ய முடியவில்லை. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவிவிடுகிறது. இந்த சூழலில்  ஜோதிகா போன்ற நல்லெண்ணம் கொண்ட சிறந்தவர்கள்  தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் தான் எங்களுக்கு மிகப்பெரிய நல்ல தன்னம்பிக்கையாக உள்ளது. 36 வயதினிலே , மகளிர்மட்டும் போன்ற படங்கள் பெண்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை பொழுதுபோக்கோடு சொல்லியது. 

 

மகளிர்மட்டும் திரைப்படத்தை கடந்த வருடம் நாங்கள் உட்பட  எங்களது கல்லூரியிலுள்ள  அனைத்து  மாணவிகளும்  கண்டுகளித்தோம் .  அவர்கள் படம் பார்த்துவிட்டு,மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா புல்லட்  ஓட்டி வந்தது போல் கல்லூரியில் நாங்கள் புல்லட் மற்றும் கன்று குட்டி ஒன்றை   ஏற்பாடு செய்து வைத்ததில் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டோம் . மகளிர் மட்டும் எங்களது மாணவிகளுக்கு புத்துணர்ச்சி தந்தது. அதே போல் ‘காற்றின் மொழியும்’ இருக்கும் என்று நம்புகிறோம். காரணம் இயக்குனர் ராதா மோகனின் ‘மொழி’ எங்களுக்கு பிடித்த படம். என்றும் எல்லோரும் ரசிக்கும் ஆபாசமில்லாத படம். அதே போல் காற்றின் மொழியும் இருக்கும் என்று நம்புகிறோம். இங்கே நாவல் படித்து கருத்தை தெரிந்துகொள்ள யாருக்கும் நேரமில்லை. ஆனால்,சினிமாவை பெரிதும் திரையரங்கில் சென்று கண்டிராத எமது மாணவிகளுக்கு காற்றின் மொழி அதை அனைத்தையும்,  கண்டிப்பாக தரும் என்று நம்புகிறோம், என்று கூறினார்கள்.

 

மேலும், சினிமாவில் எப்போதும் எந்த நேரத்திலும் நல்ல விஷயங்களை மட்டும் கையில்லெடுக்கும் நடிகை ஜோதிகாவை பாராட்டியே தீரவேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கும் கணவர் சூர்யாவையும் பாராட்டுகிறோம்.” என்று தெரிவித்தார்கள்.