Aug 16, 2018 06:27 PM

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ‘ஆறிலிருந்து ஆறுவரை’

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ‘ஆறிலிருந்து ஆறுவரை’

ஆர்.எப்.ஐ இண்டர்நேஷ்னல் மற்றும் டி.எஸ்.எஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஆறிலிருந்து ஆறுவரை’. தலைப்பிலே வித்தியாசத்தை காட்டியிருக்கும் இப்படக்குழு கதைக்களத்தையும் வித்தியாசமாகவே கையாண்டிருக்கிறார்கள்.

 

மாலை 6 மணிக்கு தொடங்கி காலை 6 மணிக்கு முடியும் கதையம்சம் கொண்ட இப்படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை பேசுவதோடு, பல பிரச்சினைகளை சந்திக்கும் பெண், அவைகளை எவ்வாறு எதிர்த்து போராடுகிறாள் என்பதை ஆக்‌ஷன், திகில், திரில்லர், காதல், காமெடி என அனைத்தையும் கலந்து கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்கள்.

 

‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்கள் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதுபோல இப்படமும் ரசிகர்களை நிச்சயம் கவரும், என்று கூறிய இப்படத்தின் தயாரிப்பாளர் ரோஹன், அதற்காக இப்படம் அடல்ட் படம் என்று நினைத்து விடவேண்டாம், இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் பழிவாங்குவதையே வித்தியாசமாக சொல்லியிருக்கிறோம், சமீபத்திய வெற்றிப் படங்களைப் போல இப்படமும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு உருவாக்கியிருக்கிறோம், என்றார்.

 

ஹீரோவாக கெளசிக் நடிக்க, ஹீரோயினாக குஷ்புசிங் நடிக்கிறார். இவர்களுடன் பூஜா ஹங்குலி, ஜெயபிரகாஷ், ஜார்ஜ் பிரசாத், மிப்புசாமி, பிரபு, ஜார்ஜ் பிரிட்டோ, தமிழ் கண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

Jayaprakash

 

அறிமுக இயக்குநர் ஸ்ரீஹரி இயக்கும் இப்படத்தின் மூலம் பெண் இசையமைப்பாளர் ஜீவாவர்ஷினி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய சி.எஸ்.பிரேம் எடிட்டிங் செய்கிறார். சினேகன், விவேகா ஆகியோர் பாடல்கள் எழுத, சுரேஷ் நடனம் அமைக்கிறார். நெல்லை சுந்தர்ராஜன் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார். இணை இயக்குநராக பூபால நடேசன் பணியாற்றியிருக்கிறார்.

 

ரோஹன், வி.ஆர்.ஆர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், மைசூர், ஊட்டி, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.