Oct 06, 2018 06:43 AM

குடும்பத்தோடு ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்!

குடும்பத்தோடு ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பொதுமக்கள் பாராட்டுவதோடு, திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி  ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட குடுமத்தினருடன் சேர்ந்து நேற்று ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்தார். மேலும், அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் படத்தை பார்த்தார்.

 

Pariyerum Perumal speacial screening

 

படம் முடிந்த பிறகு படத்தை தயாரித்த இயக்குநர் பா.ரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜியையும் வெகுவாக பாராட்டிய மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம். திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.