Dec 19, 2018 05:14 AM

ஜெயலலிதாவின் வாழ்க்கை படம்! - பாகுபலி நடிகையுடன் களத்தில் இறங்கும் பிரபல இயக்குநர்

ஜெயலலிதாவின் வாழ்க்கை படம்! - பாகுபலி நடிகையுடன் களத்தில் இறங்கும் பிரபல இயக்குநர்

தமிழ் சினிமாவகட்டும், தமிழக அரசியலாகட்டும் இரண்டிலும் முக்கியமான இடத்தை பிடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் இந்தி அளவில் பெயர் பெற்ற இவரது மறைவும், கடைசி நாட்களும் யாரும் எதிர்பாரத ஒன்றாக அமைந்துவிட்டது.

 

தற்போது, ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பலர் களத்தில் இறங்கியுள்ளனர். இயக்குநர் மிஷ்கினின் உதவியாளராக பணியாற்றிய  பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குநர் ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க உள்ளார். இதில் ஜெயலலிதாவாக மலையாள நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் சில இயக்குநர்களும் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க களத்தில் இறங்கியுள்ளார். ஆனால், அவர் அதை திரைப்படமாக அல்லாமல் வெப் சீரியசாக எடுக்க இருக்கிறார். 

 

Ramya Krishnan and Goutham Menon

 

இதில் ஜெயலலிதா வேடத்தில் ‘பாகுபலி’ படத்தில் சிவகாமியாக கலக்கிய ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார்.sa