Nov 19, 2018 09:53 AM

போன் எடுக்காத விஷால்! - புலம்பும் ஹீரோ

போன் எடுக்காத விஷால்! - புலம்பும் ஹீரோ

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷால், நடிப்பதில் தீவிரம் காட்டுவதை விட சங்க வேலைகளில் தீவிரம் காட்டி வந்தவர், தமிழ் சினிமாவில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவதற்காக பல அதிரடியான விஷயங்களையும் செய்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த அதிரடியான விஷயங்களில் வாரத்திற்கு நான்கு படங்கள் மட்டுமே வெளியாக வேண்டும், என்ற திட்டமும் ஒன்று.

 

முதலில் சென்சார் வாங்கும் படங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாரம் நான்கு படங்கள் வெளியானாலும், சில படங்கள் திடீரென்று ரிலீஸாவதும், இதனால் ஏற்கனவே வெளியாக காத்திருந்த படங்கள் தள்ளிப் போவதும் அடிக்கடிக்கடி நடந்துக் கொண்டு இருப்பதால், சில சிறிய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

தயரிப்பாளர் சங்க தலைவராக விஷாலுக்கு, இந்த விவகாரம் தலைவலியாக இருக்க, பத்தாக்குறைக்கு யாரோ ஒரு பெண், விஷால் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்தார், நட்சத்திர கிரிக்கெட்டில் லூட்டி அடித்தார், என்று கூறி வர, மறுபக்கம், அதிமுக நாளிதழில், நடிகர் சங்கத்தில் ரூ.7 கோடி காணவில்லை, அதற்கு விஷால் தான் பொறுப்பு, என்று எழுது வருகிறார்கள்.

 

இப்படி பல பக்கங்களில் இருந்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விஷால் குறித்து நடிகர் ஒருவர் சமீபத்தில் புலம்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகனான உதயா, ‘உத்தரவு மகாராஜா’ என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு போதிய திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்று புலம்பும் உதயா, இது குறித்து முறையிட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும், போன் மேல் போன் செய்தாராம். ஆனால், விஷால் எந்த காலுக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணவில்லையாம்.

 

Uthaya

 

இதை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்ட உதயா, ”விஷாலை நான் நம்பினேன், ஆனால் இப்போது தான் அவர் யார் என்று புரிகிறது. அவருக்காக நடிகர் சங்கத்தில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், எனக்கு பிரச்சினை என்று வரும்போது அவர் போனை எடுக்கவில்லை. என்னை ஒரு தயாரிப்பாளராக பார்க்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஒரு நண்பனாக நினைத்து என் போனை எடுத்திருக்கலாம், அதை கூட அவர் செய்யவில்லை.” என்று புலம்பி தீர்த்துவிட்டார்.