Aug 08, 2018 07:32 AM

கருணாநிதிக்கு மெரீனாவிடல் இடம் தர நீதிமன்றம் உத்தரவு!

கருணாநிதிக்கு மெரீனாவிடல் இடம் தர நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் தர தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தற்போது ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

இதற்கிடையே, கருணாநிதியின் உடல் அடைக்கம் செய்வதற்கு மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இடம் தர வேண்டும் என்று திமுக விடுத்த கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு, கிண்டி அருகே இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்தது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படியும் கேட்டுக்கொண்டது.

 

அதன்படி, நேற்று இரவு 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது, பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இன்று காலை 8 மணிக்கு மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார்.

 

இதையடுத்து, இன்று காலை 8 மணிக்கு விசாரணை தொடங்கியதும், இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாக்கு வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சுமார் 10.40 மணிக்கு, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் தர தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

இந்த தீர்ப்பை கொண்டாடி வரும் திமுக-வினர் இறப்பிலும் போராடி இட ஒத்துக்கீடு பெற்ற ஒரே தலைவர் கலைஞர் தான் என்று அவர் புகழை பாடி வருகிறார்கள்.