Feb 22, 2018 04:08 AM

கமலின் கட்சி சின்னத்திற்கான அர்த்தம் இது தான்!

கமலின் கட்சி சின்னத்திற்கான அர்த்தம் இது தான்!

நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட்டார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இக்கட்சியின் கொடியில் ஆறு கைகள் இணைந்திருப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த சின்னத்திற்கான அர்த்தம் என்னவாக இருக்கும், என்று மக்களிடம் விவாவதம் ஏற்பட்ட நிலையில், கமலே அதற்கான அர்த்தத்தை கூறியுள்ளார். 

 

அதாவது, சின்னத்தை உற்றுப் பார்த்தால், அந்தக் கொடியில் இருக்க்ம் 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலத்தைக் குறிக்கும் என்றும், நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும், என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

 

தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் தன்னை வட மாநிலம் என சொல்லிக் கொள்ளாமல், தென் மாநிலங்களுள் ஒன்றாகவே கருதும் மராட்டிய மாநிலம் ஆகியவை தான் இந்தியாவின் பெரும்பான்மை நிதி ஆதாரமாகத் திகழ்கின்றன. குறிப்பாக மராட்டியமும், தமிழகமும் இந்தியாவின் மொத்த வருமானத்தில் கிட்டதட்ட பாதி பங்களிப்பைத் தருகின்றன. எனவே தென் மாநிலங்கள் ஒற்றுமையாக செயல்பட்டால், மத்திய அரசிடம் பாதிப்பை ஏற்படுத்த முடியும், என்று கமல்ஹாசன் பேசியிருப்பதும், கட்சி சின்னத்தில் தென் மாநிலங்களை இணைத்திருப்பதும் மத்திய அரசுக்கு பெரும் நெருடிக்கடையை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.