Dec 18, 2018 12:00 PM

ரிலீஸுக்கு முன்பாகவே இணையத்தில் வெளியான ‘கே.ஜி.எப்’? - கலக்கத்தில் விஷால்

ரிலீஸுக்கு முன்பாகவே இணையத்தில் வெளியான ‘கே.ஜி.எப்’? - கலக்கத்தில் விஷால்

கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கே.ஜி.எப்’. கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கன்னட சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படமாகும். இதனாலேயே இப்படத்தை கன்னடம் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.

 

தமிழில் இப்படத்தை நடிகர் விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார். மேலும், இப்படத்தை பணத்திற்காக அல்லாமல், நடிகர் யாஷுக்காகவே தான் வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

வரும் டிசம்பர் 21 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘கே.ஜி.எப்’ இணையத்தில் வெளியாகிவிட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பைரசியை தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விஷாலின் வெளியிடும் படத்திற்கு இப்படி ஒரு நிலமையா? என்று மொத்த கோலிவுட்டே பெரும் பரபரப்படைந்துள்ளது.

 

ஆனால், இதை மறுத்திருக்கும் ‘கே.ஜி.எப்’ படத்தின் தயாரிப்பு தரப்பு, பைரஸியை தடுக்க 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளது.