Jul 17, 2018 03:54 AM

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் ‘ஹவுஸ் ஓனர்’

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் ‘ஹவுஸ் ஓனர்’

நடிகை, இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி என பண்முகத் திறமைக் கொண்ட லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது இயக்கி வரும் படத்திற்கு ‘ஹவுஸ் ஓனர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ‘பசங்க’ கிஷோர் ஹீரோவாகவும், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.

 

சென்னை வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு காதல் கதையான இந்த படத்தை வித்தியாசமான ஒரு அணுகுமுறையுடன் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கையாள்கிறாராம். ஆம், ஒரு தீவிரமான காதல் கதையாக இருந்தாலும் படத்தில் பாடல்கள் கிடையாது. அதேபோல், சென்னை வெள்ளம் சார்ந்த எந்த ஒரு காட்சியும் இருக்காது. 

 

இப்படம் குறித்து கூறிய லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், “ஆரம்பத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்தே இதே ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. அனால் அந்த நேரத்தில் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை. இதற்கிடையில், நடிகர்கள் அவர்களின் கடமைகளில் பிஸியாகி விட்டனர். மேலும் அவர்கள் தற்போதைய படங்களை முடித்துவிட்டு தான் திரும்ப வருவார்கள். இது  தவிர, என் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை ‘ப்ளூ இன்க்’ என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தேன். ஜூன் 10 ஆம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பு, ரியாலிடி ஷோ தற்காலிக தடை காரணமாக, முன்னோக்கி செல்ல எனக்கு தயக்கமாக இருந்தது. அதன் சேட்டிலைர் மற்றும் வெளிநாட்டு உரிமைகள் கூட உறுதி செய்யப்பட்டு விட்டன. மேலும் நான் நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் எப்போதும் செய்திருக்கிறேன், அதைப் பற்றி கவலைப்படுவது தேவையற்றது என உணர்ந்தேன். சேனல் என்னை நன்றாக புரிந்து கொண்டது மற்றும் என் மனது சொல்வதை பின்பற்ற என்னை ஊக்குவித்தது. நாங்கள் ‘ஹவுஸ் ஓனர்’ ஆரம்பித்தோம்.” என்றார்.

 

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

 

கிர்ஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரேம் எடிட்டிங் செய்கிறார். படத்துக்கு பின்னணி இசை மட்டும் தேவைப்படுவதால் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு மட்டுமே இசையமைப்பாளரை உறுதி செய்யும் முடிவில் லக்‌ஷ்மி ராமகிருஷ்னன் இருக்கிறாராம்.