Jul 20, 2018 02:25 PM

மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரும் ‘மசாலா காஃபி’ இசைக் குழு

மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரும் ‘மசாலா காஃபி’ இசைக் குழு

கேரளாவில் பிரபலமான இசைக் குழுவாக வலம் வரும் ‘மசாலா காஃபி’ இசைக் குழு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு வெளியான உறியடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்த இசைக் குழு கேரளாவில் புகழ் பெற்ற இசைக் குழுவாக திகழ்வதோடு, இவர்களது இசையமைப்பில் வெளியான மலையாப் படங்களின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

 

இந்த நிலையில், துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் உருவாகும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு மசாலா காஃபி குழு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 

இது குறித்து படத்தின் இயக்குநர் தேசிங் கூறும்போது, “இசை இன்னும் புத்மையாக இருக்க வேண்டும், அது தான் இந்த காதல் கதைக்கு பல வண்ணங்களை சேர்க்கும் என நினைத்தோம். இயற்கையாகவே, அழகான துல்கர் மற்றும் நேர்த்தியான ரிது வர்மா நடிப்பதால் இசை மூலம் இந்த காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். அதை இந்த இளைஞர் குழு மிகச்சரியாக செய்யும் என நாங்கள் நினைத்தோம். ஏற்கனவே இவர்கள் உறியடி படத்திற்கு இசையமைத்திருந்தாலும், அவை இவர்களின் முந்தைய ஆல்பங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. ஆனால், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் பாடல்கள் புதியதாக இருக்கும். படத்தில் வெவ்வேறு வகையான நான்கு பாடல்கள் உள்ளன. மிகச்சிறந்த அனுவத்தை கொடுக்கும்.” என்றார்.

 

KannumKannumKollaiyadithal

 

ஆண்டோ ஜோசெஃப் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் ஆண்டோ சோசெஃப் கூறுகையில், “சமூக ஊடகங்களில் இந்த இசைக்குழுவிற்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது. நாளுக்கு நாள் இந்த இசைக்குழுவுக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே போவதும் இவர்களை இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய காரணம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு உருவாகி வரும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இளைஞர்களுக்கான படமாக இருக்கும் என நான் உறுதியாக கூறுவேன்.” என்றார்.

 

துல்கர் சல்மானின் 25 வது படமாக உருவாகும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இசைப் பணிகள் தொடங்கியுள்ளது.