Apr 25, 2018 04:20 AM

தெம்மாங்கு பாடகர்களுக்காக இசையமைப்பாளர் தஷி உருவாக்கிய இசை ஆல்பம்!

தெம்மாங்கு பாடகர்களுக்காக இசையமைப்பாளர் தஷி உருவாக்கிய இசை ஆல்பம்!

சிறந்த பின்னணி இசைக்காக கேரள அரசின் விருது பெற்ற இசையமைப்பாளர் தஷி, திரைப்படங்ளுக்கு இசையமைப்பதுடன், பக்தி இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தனி இசை ஆல்பங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தெம்மாங்கு பாடகர்களுக்காக புதிய இசை ஆல்பம் ஒன்றை அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

 

‘சின்ன சின்ன வண்ணக்கிளி’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த இசை ஆல்பத்தில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகையில் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ள இந்த 9 பாடல்களையும் எழுதி பாடியிருப்பவர் நாட்டுப்புற பாடகர் தெம்மாங்கு ரமேஷ். இவருடன் மற்றொரு தெம்மாங்கு பாடகியான மஞ்சக்குடி ஜெயலட்சுமியும் பாடியுள்ளார்.

 

இசைக் கச்சேரிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வந்த தெம்மாங்கு ரமேஷ் மற்றும் மஞ்சக்குடி ஜெயலட்சுமி ஆகியோரை, திருவாரூரில் நடைபெற்ற இசைக் கச்சேரி ஒன்றில் பார்த்த இசையமைப்பாளர் தஷி, அவர்களது குரல் வலத்தை பார்த்து அவர்களை ‘ஆடவர்’ என்ற திரைப்படத்தில் பாட வைத்து தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தினார். அதை தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வரும் அவர், தற்போது ‘சின்ன சின்ன வண்ணக்கிளி’ இசை ஆல்பத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

 

சமீபத்தில் வெளியிடப்பட்டு மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ள ‘சின்ன சின்ன வண்ணக்கிளி’ இசை ஆல்பத்தை நடிகர் ஜெய் ஆகாஷ் வெளியிட, திரைப்பட தயாரிப்பாளர் பி.கே.சந்திரன் பெற்றுக் கொண்டார்.

 

Govindaraj

 

இந்த இசை ஆல்பம் மட்டும் இன்றி, தான் இசையமைக்கும் படங்களிலும் தெம்மாங்கு ரமேஷ் மற்றும் மஞ்சக்குடி ஜெயலட்சுமி ஆகியோருக்கு வாய்ப்புகள் கொடுத்து வரும் இசையமைப்பாளர் தஷி, தனது ஒவ்வொரு படத்திலும், இசை ஆல்பங்களிலும் பல புதிய பாடகர்களையும், பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.